25 மே, 2012

திருச்சியில் அரசின் சார்பில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் பங்கேற்க வந்தவர்களில் ஒரு பிரிவினர் திடீர் ரகளையில் ஈடுபட்டதால், பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.



இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறை ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர். பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு, ரவிசங்கர்  ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது