14 மே, 2012

குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செந்தூரான் கல்லூரி மாணவர்கள் அபாரம்


புதுக்கோட்டை: காற்று, சூரிய தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற நவீன தொழில்நுட்ப யுக்திகளை புதுக்கோட்டை செந்தூரான் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இக்கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் இறுதியாண்டு படித்துவரும் மாணவர்கள் ராம்குமார், கார்த்திகேயன், விக்னேஸ்வரன், வீரசிங்கம், விஜயன், பிரபாகரன் ஆகியோர் மரபுசாரா எரிதியை பயன்படுத்தி குறைந்த செலவில் தடையற்ற மின்சாரம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

சூரியதி மற்றும் காற்றிலிருந்து பெறப்படும் மின்தியை பி.வி., செல் மூலம் பேட்டரியில் சேமித்து இன்வர்டர் உதவியுடன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேவைக்கு ஏற்றவாறு தடையற்ற மின்சாரத்தை பெறமுடியும்.இவ்வகை மின் உற்பத்தி உபகரணங்களை தயார் செய்வது எளிது மட்டுமின்றி செலவு மிகவும் குறைவு என்பதால் அனைத்து தரப்பினரும் இவற்றை பயன்படுத்தலாம் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மரபுசாரா எரிதி மூலம் தடையற்ற மின்சாரம் பெறுவதற்கான நவீன கருவிகளை கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ள மாணவர்களை கல்லூரியின் தலைவர் வயிரவன், முதல்வர் நவீன்சேட் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது