14 மே, 2012

பாரம்பரிய ரயில் இன்ஜின்

மூலப்பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்லவும், இங்கிலாந்தில் இருந்து வந்த உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்கு கொண்டு வரவும் பிரிட்டிஷார் துவங்கிய ரயில்வே, இன்று இந்தியாவின் அதிக பணியாளர்கள் பணி செய்யும் துறையாகவும், அதிக மக்களால் பயன்படுத்தப் படும் சேவையாகவும் உள்ளது.இந்திய நகரங்களின் கடும் வெயிலை பொறுக்க முடியாத பிரிட்டிஷார் மலைவாசஸ்தலங்களில் வசதியைப் பெருக்கி, கோடை காலத்தை சமாளித்தனர். கடும் முயற்சிகளை மேற்கொண்டு மலை வாசஸ்தலங்களுக்கும் ரயில் விட்டனர்.இந்தியாவில் தற்போதும் பயன்படும் நிலையில் உள்ள பழமையான ரயில் இன்ஜின், டார்ஜிலிங் டாய் ரயிலில் பயன்படுத்தப்படுகிறது. ரயில் இன்ஜினில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 12 கி.மீ., என்ற வேகத்தில் இந்த ரயில் மலைப்பாதையில் செல்கிறது. இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில் மழை, நிலச்சரிவு போன்றவற்றின் போது இந்த ரயில் இயங்குவது இல்லை.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது