19 மே, 2012

டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவக்கம்- அமைச்சர்

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 18: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே மாதம் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டபடி, மாவட்டத்தில் உள்ள 6 மையங்களிலும் தொடங்கும் என, செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மிகச் சிறந்த முறையிலான இலவச பயிற்சி வகுப்புகளை துவக்குவற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
வரும் 20.5.2012-ம் தேதி முதல் 31.5.2012-ம் தேதி முடிய 12 நாள்கள் தொடர்ச்சியாகவும், ஜூன் மாதத்தில் உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நாள்களும் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரே நாளில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஏராளமானவர்கள் தங்களது பெயர்களை ஒவ்வொரு மையங்களிலும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த ஆட்சியில் நேர்மையாக நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தகுதியுடைய அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும் என்பதாலேயே இந்தப் பணியை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறோம்.
இந்த வகுப்புகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடையும். இதில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள், கண்ணும், கருத்துமாக ஒரே கவனத்துடன் படித்து வெற்றி பெறவேண்டும்.
இந்த வகுப்புகள், 20-ம் தேதி காலை 10 மணிக்கு அருப்புக்கோட்டை, விருதுநகரிலும், 12 மணிக்கு சாத்தூரிலும், மாலை 2 மணிக்கு சிவகாசியிலும், 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும், 4 மணிக்கு ராஜபாளையத்திலும் தொடங்கி வைக்க உள்ளேன்.
திருச்சுழி, காரியாபட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள மையங்கள், அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது