3 மே, 2012

வீர சோழன் என்று பெயரிடப்பட்ட 15 படுக்கை கொண்ட மருத்துவமனை -900 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை - காஞ்சீபுரம் அருகே கண்டுபிடிப்பு!

900 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கைகளுடன்
மருத்துவமனை இருந்தது பற்றிய கல்வெட்டு காஞ்சீபுரம் அருகே கோவிலில்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்
ஆலய சுவரில் இருந்து பழைய கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது. இந்த கல்வெட்டில் 900 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலுடன் இணைந்து
ஒரு மருத்துவமனை செயல்பட்டது பற்றி அரிய தகவல் கிடைத்து உள்ளது.
இதுபற்றி தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியதாவது:-
பாலாறு,
வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் கரையோரம்
திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின்
கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த ஆலயத்தில்
வீர சோழன் என்று பெயரிடப்பட்ட 15 படுக்கை கொண்ட மருத்துவமனை இருந்தது
தெரியவந்துள்ளது. இதில் நிறைய ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர்.
கோதண்டராமன், அஸ்வத்தமன், பகத்தன் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களும், பல
செவிலியர்களும் ஊழியர்களும் இங்கு பணியில் ஈடுபட்டு வந்து இருப்பது
தெரியவருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் எலும்புருக்கி நோய், சிறுநீரக கோளாறு,
மூலவியாதி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்து உள்ளது.
மேலும் இங்கு 20 வகையான ஆயூர்வேத மருந்துகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மருந்து கிட்டங்கிகளும் அங்கு செயல்பட்டு
இருந்ததாக கல்வெட்டில் உள்ள தகவல் தெரிவிக்கிறது. இந்த மருத்துவமனையில்
டி.பி. நோய்க்கு பஞ்சக தைலம் மூலம் நோய் குணப்படுத்தப்பட்டு இருப்பது
தெரியவருகிறது.
இந்த ஆலயத்தின் கிழக்கு பிரகார முதல் தூணில் வீரராஜேந்திர சோழர் காலத்தின் முக்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
11ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கல்வெட்டு மூலம், அங்கு வேத கல்லூரி
செயல்பட்டதும், இந்த கல்லூரியில் ரிக்வேதம், இலக்கணம் உள்ளிட்ட 8
பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டதும், இந்த கல்லூரியில் ஒவ்வொரு
பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் இருந்துள்ளதும் தெரியவருகிறது.
மேலும் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதியும்
இங்கு அமைந்து இருந்த விவரம் கல்வெட்டில் தெரியவருகிறது.
இவ்வாறு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது