13 மே, 2012

அம்பலக்காரன் இனத்தவர் அதிகமாக வசிக்கும் நாமக்கல் மாவட்டம்


காவக்காரப்பட்டி:

காவக்காரப்பட்டி தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 18 வது கிமீட்டரில் எருமைப்பட்டி பேருராட்சியில் உள்ள சிற்றூர் ஆகும்.
இங்கு அனைத்து சமுதாயத்தவரும் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக முத்திரையர் (அம்பலக்காரன்) இனத்தவர் அதிகமாக வசித்துவருகின்றனர்.
முக்கிய பயிர்: நெல், கரும்பு, வெங்காயம், பச்சை காய்கரி, கீரை வகைகள் அதிகமாக பயிரிட்டு வருகின்றனர்.
தொழில்: விவசாயம், கோழிப் பண்ணை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவையாகும். படித்த இளைஞர்கள் பெரும்பாலும் சுமையூர்திகளை இயக்கும் பணியை அதிகம் விரும்புகின்றனர்.
மாரியம்மன் பண்டிகை வெகு விமர்சையாக ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
இங்கு பக்ரித், ரம்ஜான், தீபாவளி, பொங்கல் பண்டிகை அனைத்து இனத்தவரும் ஒன்றாக இணைந்தே கொண்டாடி வருகின்றனர்.

தலமலை பெருமாள் கோவில்

தலமலை பெருமாள் கோவிலில் ஆண்டு தோரும் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொருசனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெரும். சைவ, வைணவ பக்தர்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து சுவாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இம்மலையின் சிறப்பு: இராம பக்தர் ஜெய் ஹனுமான் இங்கு வந்து தரிசனம் பெற்று சென்றதாக தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது