14 மே, 2012

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 2ம் நாளில் 1,326 விண்ணப்பம் விற்பனை


திருச்சி: பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், நேற்று 1,326 விற்பனை செய்யப்பட்டது.தமிழகம் முழுவதும் 554 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலையுடன் இணைவுப்பெற்றுள்ளன. இக்கல்லூரிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. 30 ஆயிரம் இடங்களை தவிர மற்ற இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும் 58 மையங்களில் நேற்று முன்தினம் விண்ணப்ப விநியோகம் துவங்கின. திருச்சி மாவட்டத்தில் திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலை முதன்மை வளாகம், துவாக்குடி அரசு பாலிடெக்னிக், ஜமால் முகமது கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் விண்ணப்ப வினியோகம் செய்யப்பட்டன.முதல்நாளில் 3,507 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று, ஜமால் முகமது கல்லூரியில் 1000 விண்ணப்பங்களும், அண்ணா பல்கலை வளாகத்தில் 100, துவாக்குடி அரசு பாலிடெக்னிக்கில் 226 என மொத்தம் 1,326 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

மே 31 வரை ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பம் விற்பனை செய்யப்படும். விண்ணப்ப விநியோகம், பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 31ம் தேதியாகும்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாய்க்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாய்க்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சாதிச்சான்றிதழுடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ரேண்டம் எண் வரும் ஜூன் 20ம் தேதியும், தர வரிசைப்பட்டியல் ஜூன் 24ம் தேதியும், பொது கவுன்சலிங் ஜூலை 9ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது