25 மே, 2012

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்


முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்

First Published : 23 May 2012 06:59:40 PM IST

Last Updated : 23 May 2012 07:41:43 PM IST
திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது.
திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
திருச்சி பாலக்கரை பகுதிவழியாக ஒரு பிரிவினர் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. பாலக்கரையில் இஸ்லாமிய சமூகத்தவர் வாழும் பகுதி வழியே இவர்கள் வந்த ஊர்வலத்தை , ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இடையில் வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக அடித்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மகளிர் காவல் நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சி நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு காவல் உதவி மையங்கள் மீதும் முத்தரையர் சங்க அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர். தனியார்  பேருத்துகள், அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் திருச்சி நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பணியில் போலீஸார் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்

 யாருக்கும் யாரும் பொதுவிடத்தில் சிலையமைக்க அனுமதி தரக்கூடாது.காந்தி முதல் கறுப்பன் வரை யார் சிலையாக இருந்தாலும் பொது இடதில்லிருக்கும் சிலைகள் எல்லாமே அகற்றப்படவேண்டும்.அதுபோல பொதுவிடங்களில் உள்ள எல்லா கட்சி கொடிகளும் மற்ற கட்சிகள் சம்மந்த பட்ட எல்லாவித விளம்பர தட்டிகலுமே எல்லாமே அகற்றபோட வேண்டியவைகளே.தனி மனிதனுக்கு பொதுவிடத்தில் எந்த உரிமையும்மில்லைஎன்றால் காட்டு மிரண்டிதனமான செயல்களுக்கு இடமிருக்காது. 
By palanisamy 
5/23/2012 11:04:00 PM
 அரசின் பொது இடத்தில் உள்ள எந்த சிலைக்கும் மாலை அணிவிக்கலாகாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும். சாதிவாரியாக தங்கள் தலைவர்களுக்கோ அல்லது இறந்த கட்சி தலைவர்களுக்கோ மாலை அணிவித்தல் நிகழ்ச்சி தடபுடலாக நடந்து, பிரச்சனை தான் உருவாகிறது. தவிர போலிசின் உழைப்பும், காலமும் விரையமாகிறது. உண்மையான பற்று இருந்தால் அவர்களின் வீட்டில் தங்கள் தலைவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கட்டும். 
By கே. ராஜன், திருநெல்வேலி 
5/23/2012 9:34:00 PM
 அம்மா நிர்வாகத்தை விட்டு விட்டாரா இது என்ன கையாலாகாத அரசு மாதரி நடக்கவேண்டாம்.சட்ட ஒழுங்கு சீரடையும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்க வேண்டாம் 
By sethu 
5/23/2012 7:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this 
   to toggle between English and Tamil)


இ-மெயில் *
பெயர் *
கீழே தெரியும் கட்டத்தில் சரிபார்ப்பு வார்த்தையை உள்ளிடவும் *

R

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புகைப்படங்கள்
பிற செய்திகள்




[X]



          
   

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது