27 மே, 2012

சோழர்கள் முத்தரையர்களே


ஏறக்குறைய சுமார் 350வருடங்கள் தமிழகம் மற்றும் கர்நாடக,கொங்கணி என்று அழைக்கப்படும் கோவா வரை மற்றும் வேங்கட நாடு என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளடக்கிய பகுதிகள் வரை களப்பிரர்கள் என்ற பெயரில் ஆண்டதாக நாம் அறிய முடிகிறது என்றாலும் களப்பிரர்கள் மற்றும் முத்தரையர்களும் ஒன்றே என்றும் கிளைகுடியினர் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.
முத்தரையர்கள் சரித்திரம் குறித்து பல்வேறு வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மூலம் குறிப்பாக திரு ,மயிலை.சீனி வேங்கடசாமி ,வேதி .செல்வம் ,போன்ற ஆசிரியர்கள் முத்தரையர்களை பற்றி தங்களின் புத்தகங்களில் விரிவாகவே பதிவு செய்து இருக்கிறார்கள் .அவர்களுக்கு இங்கே மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் திரு ராசசேகர தங்கமணி , திரு ,அப்பாதுரையார்,திரு ,நாகசாமி ,திரு .கே .ஜி ,கிருஷ்ணன் ,திரு நீலகண்ட சாஸ்த்ரி ,வேங்கடராமையா ,திரு கோபிநாத அய்யர் , திரு ,கா.பா அறவாணன் போன்றவர்களின் புத்தகங்களிலும் ,பொ,வேல்சாமி அவர்கள் மற்றும் peasant state and society in medivel south india-oxford 1980 -(page 875 to 889 )by BURTON STEIN போன்ற நூல்களும் முத்தரையர் சரித்திரம் குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருந்தது . திரு ,நடன காசிநாதன் ,தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் அவர்களின் புத்தகங்கள் முத்தரையர்களின் ஆட்சிகாலம் மற்றும் சரித்திரத்தை தெளிவாக பதிவிட்டுள்ளார் அவரக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறோம் .
அதேபோல் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய விசயாலய சோழன் முத்தரைய மன்னன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரைய மன்னினிடம் தளபதியாக இருந்தார் என்றும் அவரின் உண்மையான பெயர் காஞ்சிதிரையன் என்றும் அவர்தான் கருத்து பேதமையாலோ, பதவி போட்டியாலோ அம்மன்னனிடமிருந்து பிரிந்து வெளியேறி திருச்சி அருகே உள்ள உறையூர் என்னும் ஊரை தலை நகராகக் கொண்டு ஆண்ட அவன் போரில் சாத்தன் என்னும் முத்தரைய மன்னனை தோற்கடித்தான் என்றும் சோழர்கள் முத்தரையர்களே என்றும் நூல்கள் நமக்கு தெரிவிக்கின்றன .
நிற்க இந்த www.lioncaste.blogspot.com என்ற இந்த இணைய தளம் முற்றிலும் முத்தரைய நண்பர்களின் இணைய முக நூல் குழுமம் சார்பாக வெளி வருகிறது ,இந்த குழமம் முத்தரைய இளைஞர்களின் கல்வி ,வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்கள் மற்றும் உதவிகளை பாரிமாரிகொள்ளவும் முத்தரைய இளைய சமுதாயம் தன் இன சரித்திரம் அறிந்து இருக்கவும் இக்குழுமம் துவக்கப்பட்டு திருச்சி ,மற்றும் சென்னையில் நண்பர்களின் சந்திப்பும் நடந்து முடிந்திருக்கிறது ,இதன் மூலம் பல நண்பர்களக்கு வேலை மற்றும் கல்வி குறித்து தகவல்களும் ,தங்களது சொந்த ஊரின் நண்பர்கள் பங்காளிகள் போன்றவர்களை கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக அமைந்துள்ளது .திருமண தகவல்களும் அள்ளிக்கபப்ட்டுள்ளது ,
இந்த இணைய தளம் வெளிவர பெரிதும் உறுத்துனையாக இருந்து ஊக்கம் அளித்தமுத்தரையர் இணைய குழும நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் முத்தரைய சமுதாய பெரியவர்களுக்கும் சிறப்பாக வடிவமைத்து கொடுத்த திரு அமஜத் அவர்களுக்கும் இணைய முத்தரைய நண்பர்கள் குழுமத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது