14 மே, 2012

ஜாதி விவரம் முழுமையாக பதியாததால் கையடக்க கணினி பழுது


சென்னை: ஜாதி விவரத்தை முழுமையாக பதியாததால், கையடக்க கணினிகள் பழுதாகி சரிசெய்யப்படுகிறது. இதனால், வெறுமனே ஜாதியை குறிப்பிடும் போது, பி.சி., எம்.பி.சி., என தெரிவிப்பதோடு நின்று விடாமல், ஜாதிப்பெயரை மக்கள் தெரிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
என்ன விவரம் ...சென்னையில், கடந்த 1ம் தேதி முதல், ஜாதி வாரி கணக்கெடுப்புப் பணி நடக்கிறது. இதில், குடும்பத் தலைவரின் பெயர், பாலினம், பிறந்த ஆண்டு, புதிதாக பிறந்து இருப்போர், திருமணம் ஆகாதவர், தற்பொழுது திருமணமான நிலையில் இருப்பவர், துணை இழந்தவர், பிரிந்தவர், விவாகரத்தானவர், தந்தை, தாய் பெயர் (இறந்து இருந்தாலோ, வேறொரு வீட்டில் வசித்தாலோ பதிய வேண்டும்), தொழில் நடவடிக்கைகள், அதாவது வேலைக்கே செல்லாமல் வீட்டில் சும்மா இருப்பவர்கள், மாணவர்கள், பிறரை சார்ந்து இருப்போர், ஓய்வூதியர், பணி ஓய்வு பெற்றோர், பிச்சை எடுப்போர், வீடுகள் பற்றிய விவரங்கள் பதியப்படுகின்றன.
கல்வி கற்றோர் யார்?* ஏழு வயதும், அதற்கு மேலும் உள்ளவர்கள் ஏதாவது ஒரு மொழியில், புரிந்து கொண்டு படிக்க மற்றும் எழுத தெரிந்தவர்கள்.* ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, எட்டில் தேர்ச்சி பெறாதோர்- தொடக்கக் கல்வி, எட்டில் தேர்ச்சி, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதோர்- நடுநிலைக்கல்வி, 10ல் தேர்ச்சி, பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்- உயர்நிலை, 12ல் தேர்ச்சி, இளங்கலை முடிக்காதவர்-மேல்நிலை, அதற்கு மேல் படித்தவர்கள், பட்டதாரிகள் என, குறித்துக் கொள்ளப்படுகிறது.* குடும்ப வருமானத்திற்கான முக்கிய ஆதாரம், கண் பார்வையில், கேட்பதில், பேச்சில், அசைவில், மன வளர்ச்சி குறைவு, மன நோய், மற்றவகை ஊனம் கொண்டோரை மாற்றுத் திறனாளிகள் எனவும், நாட்பட்ட வியாதியான புற்றுநோய், தொழுநோய் உடையோர் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.
பதிவில் குழப்பம்ஜாதி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது. குடும்பத் தலைவர் எவ்வாறு கூறுகிறாரோ, அதை அப்படியே பதிய வேண்டும் என, கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு தான் குழப்பம் துவங்குகிறது. கையடக்க கணினியில், ஜாதியின் அரசு தொகுப்பு குறியீடான, அதாவது பி.சி., எம்.பி.சி., என, மக்கள் தெரிவித்து விடுவதால், இதுபோன்றவர்கள் எந்த வகை ஜாதியினர் என்பதை கேட்க முடிய வில்லை என, கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்தனர். எஸ்.சி., எஸ்.டி., தவிர இதர ஜாதியினர் பற்றி முழுமையாக பதியும் வசதி இருந்தும், இதை பயன்படுத்தாததால், கையடக்க கணினிகள் பழுதாகி வருவதாகவும் தெரிவித்தனர். காரணம், ஜாதி குறித்து தெளிவாக பதியாவிடில், கணினியில் அடுத்த நிலையில் பதிவு செய்ய முடியாது.
விழிப்புணர்வு அவசியம் தேசிய அளவில் கொள்கை முடிவு எடுக்க, நிதி ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடப்பதால், ஜாதி குறித்து முழு விவரத்தையும், மக்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வெறுமனே, பி.சி., எம்.பி.சி., என தெரிவிப்பதில், எந்த பயனும் இல்லை. 
அதேபோல், ஐயர், அய்யங்கார் இனத்தைச் சேர்ந்தோர் கணக்கெடுப்பாளரிடம், ஐயர் என்று தெரிவிப்பதால், அப்படியே பதிந்து கொள்கின்றனர். இதனால், கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் சிதையும் வாய்ப்பு உள்ளது. 
ஆண் ஜாதி, பெண் ஜாதி என தெரிவிப்பது, அவரவர் விருப்பம் என்றாலும், ஜாதி பற்றி தெரிவிக்க விரும்புவோர், முழுவிவரத்தையும்( குலம், கோத்திரம் அல்ல) தெரிவித்தால்தான், கணக்கெடுப்பு முழுமைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது