17 மே, 2012

2014-15-ம் ஆண்டு முதல் புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது: தொழில்நுட்ப கல்விக்குழு முடிவு

இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 393 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்கள் சேர்க்கைக்கான இடம் உள்ளது. இதேபோல் 3,900 மேலாண்மையியல் கல்லூரிகள் உள்ளன. 

இதில் 3.5 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு இடம் உள்ளது. இதில் 70 சதவீத கல்லூரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. அளவுக்கு அதிகமாக கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருப்பதால் கல்லூரிகளில் இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. 

எனவே புதிதாக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களும் கேட்டுக் கொண்டன. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் புதிதாக என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக கல்விக்குழு தலைவர் மந்தா தெரிவித்தார். புதிதாக கல்லூரிகள் தொடங்க இருப்பவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளை தொடங்கி விடுவார்கள். எனவே இப்போது கட்டுமான பணிகளை செய்ய தொடங்கியிருப்பவர்கள் பாதிக்காத வகையில் 2014-15-ம் கல்வி ஆண்டு முதல் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை என்றும் இதுபற்றி அந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழில் நுட்பக்கல்விக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் மந்தா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது