16 மே, 2012

முத்தரையர்


தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மணிகண்டம் ஒன்றிய செயற்குழு கூட்டம் தாயனூரில் சமுதாய கூடத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் குஞ்சான் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார். மாநில பொது செயலாளர் மரு.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துபவர்களிடம் தங்களை முத்தரையர் என வலியுறுத்தி பதிந்திட வேண்டும். முத்தரையருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியலில் 15 சதவீத தனி இட ஒக்கீடு வழங்க கேட்டு ஜூன் மாதம் நடைபெறும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. மே மாதம் காவிரி ஆறு மணல் வெளியில் நடைபெறும் ராஜமல்லன் முத்தரையர் வசந்த விழா தொடக்க நாளில் திரளாக கலந்து கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெரிய கோபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசமாணிக்கம், கவிஞர் லோகநாதன், வேலாயுதம், மதி, பெருமாள், சுரேஷ், குமார், ராமன், சதீஷ், மருதுபாண்டி, சின்ராசு, பழனியாண்டி, சாமிக்கண்ணு, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழனிசாமி நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது