25 மே, 2012

மாற்று வேட்பாளராக முத்தரையர்:

புதுக்கோட்டை: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, புதுக்கோட்டை இடைத்தேர்தல், அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பெயரில் இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.அவருக்கு மாற்று வேட்பாளராக, அ.தி.மு.க., புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கருப்பையா முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த முதலில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதன்பின், கடைசி நேரத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் கருப்பையன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா ஆகியோரில் ஒருவரை மாற்று வேட்பாளராக கட்சித்தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மாற்று வேட்பாளராக அறிவிக்க காலைக்கதிர் செய்தியே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன், புதுக்கோட்டை நகரம் முழுவதும் முத்தரையர்களுக்கு அ.தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் இல்லை என்ற நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது.இடைத்தேர்தல் வேளையில் இப்படி ஒரு நோட்டீஸால் அ.தி.மு.க., வேட்பாளருக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த ஞாயிறு காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன்பின்னரே மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, அதுவும் ஏற்கனவே கட்சியினருக்கும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரையும் நிறுத்த அ.தி.மு.க., சீனியர் அமைச்சர்கள் முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலை பெற்றுள்ளனர்.அதன்படியே அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு மாற்று வேட்பாளராக, முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.கருப்பையாவை மாற்று வேட்பாளராக அறிவித்தன் மூலம் தொகுதியில் உள்ள முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பர் என்று நம்பிக்கை அ.தி.மு.க., தரப்பில் தற்போது ஏற்பட்டுள்ளது.


SINGA VETTAI PUDUKOTTAI MUTHURAJA KOTTAI

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது