25 மே, 2012

திருச்சி முத்தரையர் சதயவிழாவில் கலவரம் : பொதுசொத்துக்கு சேதம்; 46 பேர் மீது வழக்கு


திருச்சி: திருச்சியில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் கலவரம் செய்த, 46 பேர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத வகையில், பொதுசொத்து சேத வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான, ஜாதிச் சங்க நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா, திருச்சி கன்டோன்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலை முன், நேற்று முன்தினம் காலை நடந்தது. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.அன்று மாலை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்த, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததால், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான வாகனங்களில், திருச்சியை முற்றுகையிட்டனர்.இவர்கள் கையில் வைத்திருந்த கொடிக்கம்பினால் செல்லும் வழியில் நின்ற, சென்ற வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்களை சரமாரியாக தாக்கியும், பெண்களின் துணிகளை பிடித்து இழுத்தும், கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு ஏராளமான பொதுமக்களுக்கு சிறியளவிலான காயங்களும் ஏற்பட்டன. அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவில் நடந்த கலவரத்தை தட்டிக்கேட்ட, காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தாக்குதலில் மண்டை உடைக்கப்பட்ட அவர், கொடுத்த புகாரின்படி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன், அவரின் மகன் ராம்பாபு உள்ளிட்ட 21 பேர் மீது, கொலைமுயற்சி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாய்ந்தது வழக்கு: திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், பஸ் கண்ணாடிகளை உடைத்த, 46 பேர் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், அனுமதியின்றி ஊர்வலமாக செல்லுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ், ஸ்ரீரங்கம், கன்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது