25 மே, 2012

முத்தரையர் இனம் கொந்தளிப்பு :


தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால்
முத்தரையர் இனம் கொந்தளிப்பு :
ஜெ., தொகுதியில் சூறை - பதட்டம்



தமிழகத்தில் முத்தரையர் இனமக்கள் பெருவாரியாக உள்ளனர்.   அதிமுகவின் வாக்கு வங்கியாகவே இவர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.   ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி பொறுப்புகளிலும் தொடர்ந்து முத்தரையர் இனம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில இடங்களில் வாய்ப்புக் கொடுத்தாலும்,   ஒரு சில மாதங்களில் பறித்துக்கொள்ளப்படுகிறது.  புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையாக சுமார் 65 வாக்காளர்கள் முத்தரையர்கள் உள்ளனர்.   இந்த தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றிய சேர்மன்களும்  பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும் முத்தரையர்களாகவே உள்ளனர்.

இந்த நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளராக ஒரு முத்தரையருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.  ஆனால், அந்த வாய்ப்பையும் கட்சி தலைமை பறித்துவிட்டது.   இதனால் தொடர்ந்து கண்டன போஸ்டர்கள் ஒட்டினர். 

இதன் காரணமாகவே முத்தரையர்  சங்கத்தின் சார்பில் ஒரு வேட்பாளரையும்
அறிவித்துள்ளனர்.   வாய்ப்பை பறித்துக்கொண்டதால் அதிமுக வேட்பாளரை புறக்கணிப்போம் என்று முத்தரையர் இன அதிமுகவினர் கட்சி தலைமைக்கே கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இன்று நடந்த திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் மேடை அமைக்க அனுமதி கேட்டிருந்தனர்.   அனுமதி மறுக்கப்பட்டது.  அதனால் தடையை மீறி மேடை அமைத்து சதய விழாவை நடத்தியுள்ளனர்.

சதய விழா முடிந்த நிலையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதும், சதய விழாவிற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருபதும் கூடியிருந்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

அதனால் திருச்சி மாநகரில் ஆங்காங்கே 
கடைகளை உடைத்தும்,  காவலர்களின் மண்டையை உடைத்தும்,  ஜெயலலிதாவின் தொகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தை சூரையாடியுள்ளனர். இதனால் திருச்சி மாநகரில் இன்னமும் பதட்டம் தணியவில்லை.




மேலும் படங்கள் :







கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது