26 மே, 2012

சாதி வெறியை தூண்டி விட்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பனி நீக்கம் செய்ய வேண்டும்

 திருச்சி சதயவிழாவில் கலவரத்தை தூண்டிய 46 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலை முன், கடந்த 23ம் தேதி நடந்தது. அன்று மாலை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.இதற்காக, நூற்றுக்கணக்கான வாகனங்களில், திருச்சியின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்த முத்தரையர் சங்கத்தினர், கொடிக்கம்புகளால் செல்லும் வழியில் இருந்த வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்களை சரமாரியாக தாக்கியும், பெண்களின் துணிகளை பிடித்து இழுத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாநகரத்தில் திருவானைக்காவல், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், தென்னூர், அரியமங்கலம் போன்ற பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.இதுகுறித்து ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், கண்டோண்மென்ட், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 46 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 29 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்னர்.* தொடர் தலைமறைவு: சதயவிழா ஊர்வலத்தின், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனின் மண்டை உடைத்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பாபு உள்ளிட்ட 21 பேர் மீது, கொலைமுயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து தலைமறைவாக உள்ள விஸ்வநாதன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக, "அவராகவே கைதாக முன்வருவார்' என்று காத்திருப்பதாக போலீஸ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது