16 மே, 2012

புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு முத்தரையர் சங்கம் எதிர்ப்பு

மதுரை,:புதுக் கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக, முத்தரையர் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவரை அறிவித்ததற்கு, அகில இந்திய முத்தரையர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அகில இந்திய முத்தரையர் இளைஞர் எழுச்சி பேரவை மற்றும் முத்தரையர் வக்கீல் சங்க அவசர கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. நிறுவனத்தலைவர் பாண்டிப்பெருமாள் தலைமை வகித்தார். பெரியகருப்பன், ராமலிங்கம், ஆண்டிச்சாமி, குப்புச்சாமி, ரவிச்சந்திரன், இளங்கோ முன்னிலை வகித்தனர். சிங்கராஜன், கண்ணன், காசிக்கருப்பையா, பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 90 சதவீதம் முத்தரையர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், அதிமுக முத்தரையர் வகுப்பை சேராத ஒருவரை வேட்பாளராக அறிவித்தது முத்தரையர் சமுதாயத்திற்கு கிடைத்த மரண அடியாகும். முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்கும் கட்சியின் வெற்றிக்கு உழைப்போம். இல்லாவிட்டால் இடைத்தேர்தலை புறக்கணிப்போம்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டாறுகளை கடந்து செல்ல, பெரிய பாலம் கட்ட வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பின் போது, 29 பட்டங்களை கொண்ட பெயர்களில் வாழும் முத்தரையர் சமுதாயத்தினர், முத்தரையர் என பதிவு செய்ய வேண்டும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் முத்தரையர் மன்னர் சிலையினை அரசு அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது