16 அக்., 2023

மழை பெய்த நாட்கள்

16.10.2023 இரவு நேரங்களிலும் செல்லக்குட்டியூரில் மழை பெய்தது. 

இலங்கை Vs ஆஸ்திரேலியா 28 ஓவர்


 

மழை பெய்த நாட்கள்

செல்லக்குட்டியூரில் இன்று
16.10.2023 அன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்தது. 

9 அக்., 2023

இந்த மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ₹1000 எப்போது வரும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

 

Magalir Urimai Thogai | இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை எப்போது வரும் என்று தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நடு அரசு அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.

இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன் இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்னும்... சில

மேல்முறையீடு செய்ய இன்னும் 12 நாட்களே மீதம் உள்ள நிலையில் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இது தொடர்பாக நாம் விசாரித்தபோது இணையத்தில் கள ஆய்வு என்று காட்டி மேல்முறையீடு செய்ய முடியாதவர்கள் கோட்டாட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரலையா.. இந்த வழி இருக்கே!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரலையா.. இந்த வழி இருக்கே!
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத விண்ணப்பதாரர்கள் பலருக்கு கள ஆய்வு என்று காட்டுவதால் அவர்களால் இணையத்தில் மேல்முறையீடு செய்ய முடியவில்லை என்றால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. இது தொடர்பாக அப்போது வெளியிட்ட அறிக்கையில், "குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார்.

இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழக அரசு கலைஞர் மகள் உரிமை திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமை மானியம் வழங்கப்படும்.

அடேங்கப்பா! 18000

18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது.

7 அக்., 2023

அரை கூவலும்

ஒரு நாள் போதாது
 பல நாள் கூட்டம்
மாலையும் கிடையாது
மரியாதையும் கிடையாது
மலையாள ஸ்வாமி க்கு
வடக்கு பார்த்த காளியம்மன்
தெற்கு பார்த்தால் என்ன
நடக்கும் ஊரின் நிலைமை
குலசாமிக்கு நேரம் வந்திருச்சு
ஊர்சாமிக்கு நேரம் வரல 










தனிநபர் உறிஞ்சு குழி

காலரா மலேரியா டெங்கு காய்ச்சல் இந்த நோய்களில் இருந்து தப்பிக்க செல்லக்குட்டியூருக்கு தனிநபர் உறிஞ்சு குழி அமைத்து தரப்படுமா? 

மக்கள் நல பணியாளர் சர்வே எடுத்து கொடுப்பார்களா
தனிநபர் உறிஞ்சு குழி செல்லக்குட்டியூர் மக்களுக்கு கிடைக்குமா கிடைக்காது
தண்ணீர் தொட்டி இருக்கும் இடங்களில் எல்லாம் அமைக்கப்பட்ட உறிஞ்சு குழி செல்லக்குட்டியூர் இடுகாட்டில் அமைக்கபடுமா? 







புதிய உதயம்.... VPM HOUSE

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் கிராமம் செல்லக்குட்டியூரில் கி. பி. 2013 ஆம் ஆண்டு உதயமானது VPM HOUSE .
பத்து ஆண்டுகளையும் கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. 
அமைவிடங்கள் தார் சாலைகளும் சிமெண்ட் சாலைகளும் இல்லாத இடத்தில் அமைந்துள்ளது. 
நல்ல காற்றோட்ட வசதியுடனும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியுடன் உள்ளது. 

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........