14 மே, 2012

பாராட்டு விழாவில் மூத்த தமிழ் எம்.பி., புறக்கணிப்பு? தமிழக மக்கள் கொந்தளிப்பு

ஈரோடு:புதுடில்லியில், நேற்று பார்லிமென்டின், 60வது ஆண்டையொட்டி, முதல் பார்லிமென்டின் முன்னாள் எம்.பி.,க்கள் இருவர் கவுரவிக்கப்பட்டனர். பாராட்டு விழாவில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரமங்கலத்தை சேர்ந்த தமிழ் எம்.பி., புறக்கணிக்கப்பட்டதால், தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

கடந்த 1952, மே 13ல், பார்லிமென்டின் முதல் கூட்டம் நடந்தது. நேற்று பார்லிமென்ட்டின், 60வது ஆண்டு தினத்தையொட்டி, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில், முதல் பார்லிமென்டை சேர்ந்த, முன்னாள் மூத்த எம்.பி.,க்கள் கவுரவிக்கப்பட்டனர். மணிப்பூர் மாநிலம், உக்ருலை சேர்ந்த ரிஷாங் கெய்சிங்க், ரோஷம் லால் ஜாங்டேவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

கடந்த, 1948ம் ஆண்டில் எம்.பி.யாக இருந்த, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த காளியண்ண கவுண்டர் கூறியதாவது:நான், இந்தியா சுதந்திரத்துக்கு பின், 1948ல் உருவான அரசியல் நிர்ணய குழுவில், அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கொண்ட, 207 பேர் நியமிக்கப்பட்டனர். அதில், நானும் ஒருவனாக இருந்தேன். 1950ல், கான்ஸ்டியூன்ட் அசெம்ப்ளி, புரவிஷனல் பார்லிமென்டாக அறிவிக்கப்பட்டது.
அந்நேரத்தில், எம்.பி.,யாக இருந்த சுப்புராயன், இந்தோனேஷிய தூதராக நியமிக்கப்பட்டதால், அவர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நான் எம்.பி.,யாக பொறுப்பேற்றேன். நான், 1952 முதல், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும், எம்.எல்.சி.,யாகவும் இருந்தேன். முதல் எம்.பி.,யாக நியமிக்கப்பட்டவர்களில், நான் மட்டுமே உயிரோடு உள்ளேன்.

இந்நிலையில், 60வது ஆண்டு பார்லிமென்ட் விழாவில், முதல் மூத்த எம்.பி.,யாக இருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு இன்று (நேற்று) பாராட்டு விழா நடத்தப்படுகிறது. பார்லிமென்டின் எம்.பி.,யாக இருந்ததால், இன்றளவும் எனக்கு பென்ஷன் வருகிறது. 

இந்நிலையில், மூத்த எம்.பி., க்கள் பாராட்டு விழாவில், என்னை புறக்கணித்துள்ளனர். எனக்கு, இதில் எந்த வருத்தமும் இல்லை; ஆனால், என்னை சார்ந்தோரை, இது மிகவும் பாதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, பொதுமக்களும், காளியண்ண கவுண்டரின் உறவினர்களும் கூறியதாவது: தமிழன் என்ற ஒரே காரணத்தால், 60வது ஆண்டு பார்லிமென்ட் பாராட்டு விழாவில், காளியண்ண கவுண்டர் புறக்கணிக்கப்பட்டதாகவே, நாங்கள் கருதுகிறோம். பார்லிமென்டின் முதல் மூத்த எம்.பி., உயிரோடு இருக்கும் போது, வட மாநிலத்தை சேர்ந்தோருக்கு பாரா ட்டு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது.சில தினத்துக்கு முன், டில்லியில் விசாரிக்கையில், "மூத்த எம்.பி.,க்களின் பட்டியலை மீண்டும் சரிபார்த்து, பாராட்டு விழாவில் காளியண்ணனையும் அழைப்போம்' என்று தெரிவித்தனர். ஆனால், அவருக்கு எந்த அழைப்பும் விடுக்காமல், வேற்று மாநில மூத்த எம்.பி.,க்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கொந்தளித்தனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது