14 டிச., 2012

கல்லூரி வாசலிலே கால் பாதிக்கும் முத்தரைய இளையவர்கள் எதனை பேர்?


வணக்கம் வுறவுகளே. நம்முடைய தமிழகம் இந்தியாவிற்கு பலவகையில் முன்னோடியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க செய்யும் ஒரு விஷயம் இடஒதுகீடு.அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி வுயர்வில் இட ஒதுக்கீட்டு கேட்டு நாடளுமன்றத்தை முடக்கி கொண்டிருகின்றர்கள்.முத்தரயர்களே....100 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிக்கூடமே எட்டா கனியாக இருந்த காலம் போய் இன்று அவர்கள் பதவி வுயர்வில் இட ஒதுக்கீட்டு கேட்கும் நிலைக்கு வுயர்ந்துவிட்டனர்,இது எப்படி சாத்தியமானது சற்று சிந்தித்து பாருங்கள்,ஒன்றா இரண்டா எத்தனை தடைகளை கடந்திருக்கின்ற்றனர்?வரலாற்றின் பக்கங்களுக்கு மட்டுமே அதன் வுன்மைகள் தெரியும்.அதெல்லாம் கடந்துதான் அவர்கள் இதை சாதித்துள்ளனர்.ஆனால் நாம் எந்தளவு கல்வியில் முன்னேறி இருக்கின்றோம்?எத்தனை மருத்துவர்கள் வுருவாகி கொண்டிருக்கின்றோம்?எத்தனை பொறியியலாளர்கள் வுருவாகி கொண்டடிருக்கின்றோம்?ஏன் பனிரெண்டாம் வகுப்பு கடந்து கல்லூரி வாசலிலே கால் பாதிக்கும் முத்தரைய இளையவர்கள் எதனை பேர்?இந்தநிலையில் நமக்கு ஒதுக்க பட்டுள்ள இட ஒதுக்கீட்டை நாம் எந்தளவு பயன்படுத்துகிறோம்.... என்றாவது சிந்தித்து வுண்டா?சிந்தித்து இருந்தால் தெரிந்திருக்கும்....நமது இட ஒதுக்கீட்டை எந்த சாதியினர் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்று.இதை தெரிந்துகொள்ள வழி வுண்டா என்று தேடிய போதுதான் கண்ணில் பட்டது சட்டநாதனின் அறிக்கை 1974 லே கருணாநிதியின் அரசிற்கு சமர்பிக்க பட்டது இந்த அறிக்கையை படித்த பின்புதான் ஒரு வுண்மை தெரிந்தது.நாம் எவ்வளவு பின் தங்கி இருகின்றோம் எனவும் சில சாதிகளின் தெளிவான பார்வைக்கு முன் முத்தரைய சாதியை போன்ற சில பாவப்பட்ட சாதிகள் எப்படி இரையாகி கிடக்கிறது என்று.சட்டநாதனின் அறிக்கைக்கு முன்பு சட்டனாதனை பற்றிய சில செய்திகள் அந்த வன்னியனின் சுயசரிதையான ஒரு சூத்திரனின் கதை என்ற நூலில் இருந்து.(ஆம் பார்பனின் வருனசிரமக்கோட்பாட்டின் படி தமிழன் எல்லோரும் சூத்திர்கல்தான்.யாரும் சத்திரியனும் கிடையாது வைசியனும் கிடையாது,மேலும் அரக்கனின் வழிவந்த நாம் அனைவரும் அரக்கர் தான். ) சுருக்கமாக அவரைபற்றி ஓரிரு வரிகள்....

சட்டநாதன்....தமிழகத்தின் தென் பகுதியில் செங்கோட்டை அருகே பிறந்தவர்.வசதியற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து யாரோ ஒருவரின் வுதவியால் முயன்று படித்து UPSC தேர்விலே வெற்றி பெரும் அளவு படித்தவர்.ஒரு நேர்மையான மனிதர் அதனால்தான் தான் செய்து கொடுத்த அறிக்கைக்கு கூட அரசிடம் காசு வாங்காத வுத்தமன்...இந்த வன்னியன்.பட்டபடிப்பு படிக்கும் வரை காலில் செருப்பு கூட அணியாத ஒரு மனிதன்.படிக்கும் ஒவ்வொருவரின் கண்ணிலும் கண்ணீர் வரசெயும் வுருக்கமான கதை அவரது இளமை பருவம்.அன்றைய ஆதிக்கத்தையும் தாண்டி தன லட்சியத்தை அடைந்த தன்னிகரற்ற படையாச்சி இந்த சூத்திரன்.

பிற்படுத்த பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை(50%)எந்தெந்த சாதிகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதற்கான ஆய்வுதான் இவரது அறிக்கை.அதில் சொல்லப்பட்டுள்ள அறிக்கையின்படி மக்கள் தொகையிலே வெறும் 11.3% மக்கள் தொகை கொண்ட சாதிகள் GAZETTED போஸ்டில் 48.2% ம் NON GAZETTED போஸ்டில் 37.3% ம் இருகின்றனர்.இந்த ஒன்பது சாதிகள் எது என்பதை அவர் சொல்ல முடியாது என்கிறார் ஆனால் அதற்கு முன்னால் வுள்ள பதிவின் மக்கள் தொகையையும் இந்த பகுதியில் வுள்ள மக்கள் தொகையையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த ஒன்போது சாதிகள் எது என்று தெளிவாக தெரிகின்றது.அவை

1.VADUGAS.(1,10,102) NON GAZETTED =703. GAZETTED=20.

2.THULLUVA VELLALAS.(2,00,000)NG=1,050.GAZET=44

3.AGAMUDIYANS (4,70,505)NG=2,605 GAZ=49

4.GAVARAS (1,87,829)NG=1,058.GAZ=21

5.VEERAKOTI VELLALAS .(91,447)NG =455,GAZ=6

6.SOURASHTRAS .(1,62,812)NG =521,G =13

7.SADHU CHETTIS.(1,08,262)NG =264 G =0

8.KAIKOLAN(SENGUNTHAR,SOZHIA)(7,00,207) NG =1,312 G =47

9.DEVANGAS.(2,96,731)NG =8,511. G=211.

POPULATION ...NONGAZETTED ,GAZETTED.

இந்த ஒன்பது சாதிகள் இப்படி போட்டிபோட்டு பதவிகளை அள்ளும்போது ஒரு 7 சாதி எப்படிப்பட்ட நிலையில் வுள்ளதென அடுத்து சொல்கிறார் அவை...

1.VALAIYAN POPULATION(6,33,478) NG=11 GAZETTED=0

2.YOGEESMARAN 75,000 NG=1, G=0

3.MUTHURAJA OR முத்திரையன் 3,46,682 NG=153,GAZET=0

4.குருபா,KURUMPA 2,84,307 NG =33,G =1

5.BOYA ,ODDA 5,07,248 NG =56 G =1

6.AMBALAKARAN 2,98,024 NG=83 G=0

7.PARVATHARAJAKULAM 3,50,000. 88,2

இந்த அறிக்கை 29 பெயர்களில் சிதறி வாழும் முத்தரைய வுரவுகளை ஒட்டுமொத்தமாக முத்தரையர் என்று அறிவிக்கும் முன்னர் வந்தது.அதனால் தான் வலையர்,முத்துராஜா,அம்பலக்காரர் என தனித்தனியே வகைபடுதிவுள்ளார்.ஆக இழிநிலையில் இருக்கும் 7 சாதிகளில் 3ஐ முத்தரையர் சாதி ஆக்கிரமித்துள்ளது.மொத்தமாக இந்த 5 சாதிகளும் 12.1% மக்கள் தொகையை கொண்டுள்ளது.இதில் NON GAZET இல் 1.9%ம GAZETTE இல் வெறும் 0.9% ம் கொண்டுள்ளது.இதில் சிறப்பம்சம் அன்றைக்கு ஒரு முத்தரையர் கூட GAZZTTED போஸ்டில் இல்லை.இன்றைக்கும் இதே நிலைதானே தொடர்கின்றது?

முன்னர் சொன்ன ஒன்பது சாதிகளை இதோடு ஒப்பிட்டு பாருங்கள் வுண்மை தெரியும். எதனால் ஏற்படுகின்றது சிந்தித்து பாருங்கள்.குறைந்தபட்சம் நம்முடைய சாதி என்பத்ர்கேனும் சிந்தித்து பாருங்கள்.இன்றைக்கு முத்தரயர்களின் நிலை பெரும்பாலும் எப்படி இருக்கின்றது?கூலி வேலை செய்யும் தாய்,தந்தை.அரசுப்பள்ளியில் படிக்கும் பிள்ளை.அவனுக்கு சத்துணவுதான் வுணவு.அவன் கல்வின் தரம் எப்படியிருக்கும்?அவன் சரியான வுனவின்றி அவனால் ஆரோக்கிமாக எப்படி படிக்க முடியும்?எங்கள் பகுதியில் இன்றைக்கும் ஒரு பள்ளியிலே படிக்கும் மாணவனை அவன் முத்தராயனா என்று பார்த்த வுடனே சொல்ல முடியும்.மெலிந்த வுடல்,குள்ளமான வுருவம்,இவைதான் நம் தம்பிகளின் அடையாளம்.கூலிவேலை செய்யும் தாய் தகப்பனால்....இன்றைக்கு பிள்ளைகளை எப்படி பட்ட படிப்பு படிக்க வைக்க முடியுமா?பின்பு எப்படி சமுதாயம் முன்னேறும்?அவர்கள் வாழ்வில் அரசியலை அறிந்துகொள்ள முடியுமா>பொது அறிவை வளர்க வழி வுண்டா?ஆங்கில அறிவை பெரும் வழி ஏதும் வுண்டா? கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சமுதாயத்திற்கு எந்த அரசியல் வாதியேனும் முக்கியத்துவம் கொடுகிறர்களா ? இல்லை முத்தரையர் என்றால் எவனுக்காவது தெரிகிறதா?

சில அரசியல் வாதிகளுக்கு கொடிபிடிக்கவும்...கொள்கை பரப்பவும்,அதற்காக அடி வாங்கவும் மட்டும் முத்தரையன் தேவை.ஆனால் நாங்கள் அரசியலில் வளர்ந்தால் பொறுக்காது,எவன் வுணர்வாக வுள்ளானோ அவனை கொன்று விடுவதாக மிரட்டுவது...கிளை செயலாளர் பதவியை தவிர வேறு ஏதும் தர மாட்டார்கள்.எல்ல தொகுதிக்கும் யார் பெரும்பான்மையோ அவர்கள்தான் வேட்பாளர்கள்,அனால் எங்கள் தொகுதிதான் சினிமா நடிகனையும்,100 கிலோ METERKU அப்பால் வுள்ள மாற்றானையும் நிறுத்த வுதவும் தொகுதி.

அரசியல் சாணக்கியன் என்று சொல்லிகொள்ளும் ஒரு...............மதுரையில் தேர்தலின் பிரசாரத்திற்கு தங்கியிருந்தபோது நாங்கள் 2 கோடி மக்கள் தொகை கொண்டவர்கள் எங்களுக்கு விரிய முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொன்னபோது 2 கோடியா எந்தெந்த கோடியில் வுள்ளீர்கள் என நக்கல் செய்துள்ளார்.அந்தாளை 50 ஆண்டுகளுக்குமுன்பு சொந்த வூரில் தேர்தலில் நிற்க முயற்சித்தபோது,சில ஆதிக்க சாதிகள் அடித்துவிரட்டிய பிறகு வா என அழைத்து சைக்கிளின் பின்பு வுக்கரவைத்து அழுத்தி சென்று பிரச்சாரம் செய்யவைத்தது,ஜெயிக்க வைத்தது ஒரு முத்தரைய குப்பந்தான் என்பதை அந்த நபர் எப்படி மறக்க முடிந்தது?அதற்கான நன்றி கடன்தான் இந்த நக்கலா?இப்படி படிப்பு,கல்வி,பொருளாதாரம்,அரசியல் என்று இழிநிலையில் இருக்கும் நாம் முன்னேற வலி என்ன?நம்மை ஏளனப்படுத்திய|ஏளனப்படுதுபவர்களை எதிர்த்து விரட்டி அடிப்பது எப்போது?வாருங்கள் வுரவுகளே ஒன்றுபட்டு களம் காண்போம் நமக்கான வுரிமையை போராடிப்பெருவோம்....

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........