15 டிச., 2012

தேவர்மலைக் கற்றளியும் முத்தரையர் செதுக்கியதே


முத்தரையர் சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு உதவிவந்தனராயினும்
சமண சமயத்துக்கும் பேராதரவு காட்டி வந்தனர். முத்தரையர் காலத்தில்
இயற்றப்பட்ட நாலடியார்15 நூலில் காணப்படும் குறிப்புகள் இதனைத்
தெரிவிக்கின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் முத்தரையர் துணை புரிந்து
வந்தனர். அவர்களுடைய அரசவையில் பல தமிழ்ப் புலவர்கள்
அமர்ந்திருந்தனர். பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று
இளம்பெருமானார், பவடாயமங்கலம் அமருந்நிலை என்பார் அவர்களுள்
சிலர். இப் புலவர்களின் பாடல்கள் செந்தலையில் உள்ள சுந்தரேசுவரர்
கோயில் தூண்களின்மேல் செதுக்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் வெண்பா,
கட்டளைக் கலித்துறைச் சீர்களில் இயற்றப்பட்டுள்ளன. அமிதசாகரர் இயற்றிய
யாப்பருங்கலவிருத்தியில் (கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி) தமிழ்
‘முத்தரையர் கோவை’ என்னும் நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.
அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

     முத்தரையர்கள் கோயில் கட்டுவதிலும், கற்றளிகள் குடைவதிலும் தம்
நோக்கத்தைச் செலுத்திவந்தனர். சாத்தன் பழியிலி என்ற முத்தரைய மன்னன்
பழியிலீசுவரம் குடைவித்தான். அவனுடைய மகள் அதற்கு முகமண்டபம்,
பலிபீடம், நந்தி இடபமண்டபம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தாள்.
திருமெய்யம் தாலூக்காவில் பூவனைக்குடி என்ற இடத்தில் குடையப்பட்டுள்ள
புஷ்பவனேசுரர் கோயில் பூதி களரி அமரூன்றி முத்தரையன் அமைத்ததாகும்.
தேவர்மலைக் கற்றளியும் முத்தரையர் செதுக்கியதே எனக் கருதுவர்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........