31 டிச., 2012

தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் சாத்தியமாக்குங்கள்

தமிழ் தேசியம் பேசக்கூடிய அரசியல்வாதிகளால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தரமுடியும்,ஆனால் அரசியலுக்காக தமிழ் தேசியம் பேசவருபவர்களால் அது இயலாது.சாதி அரசியல் நடத்துபவர்கள் தமிழ் தேசியம் பேசுவது தவறு என்றால்,அதை விட பெரிய தவறு சாதிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களை ஒன்றிணைப்பதாக சொல்லுகிற தலைவர்கள் கூட தமக்குள் ஒன்றிணைய முடியாமல் இருப்பது....
இத்தனை ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் முழு நம்பிக்கையோடு,பிரபாகரனின் ஆதரவோடு,தமிழகத்திலே அரசியல் செய்த அவர்களின் நம்பிக்கை கூட்டணியை நம்பி இருந்ததா இல்லை தமிழ் தேசியத்தை நம்பி இருந்ததா என்பதைக் கூட அறியமுடியாத நிலையில் நாங்கள் இல்லை.ஈழத்தின் வர்க்க வேறுபாட்டயுனர்ந்து அதற்கு தகுந்தவாறு அரசியல் களம் அமைத்து,தமிழர்களை ஓன்று சேர்த்தால் மட்டுமே தமிழ்தேசியம் சாத்தியம்.அதை விடுத்து மீண்டும் பிரபாகரன் வருவார் ஈழப் போர் மீண்டும் வெடிக்கும் என்று சொல்லுவது தங்களை ஈழப் போராளிகளிடத்திளிருந்து தனிமைப்படுத்தி நாங்கள் அரசியல்வாதிகள்தான் போராளிகளல்ல,பேசுவதோடு எங்கள் பணி முடிகிறது என்பதை போன்று வுள்ளது.பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்பது இப்பொழுது விவாததிற்குவுரிய செய்தி கிடையாது.ஆனால் பிரபாகரன் தான் செய்யநினைத்ததை செவ்வனே செய்துவிட்டார்,ஈழ போராளிகளின் போராட்டம் கரம் இருக்கும் வரை அல்ல,அவர்தம்முடலில் வுயிர் இருக்கும் வரையென்று வுலகிற்கு வுரைக்கச் செய்துவிட்டார்.நாம் சட்டையிலே போட்டுக்கொள்ளும் சே குவேராவையும்,பிடல் காஸ்ட்ரோவையும் நூறு மடங்கு வீரத்தில் சிறந்தவர்கள் புலிகள் என அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார்.எனவே அடுத்தகட்டமாக தமிழகத்திலிருந்து எப்படியான போராட்டம் வெளிப்பட்டால் தனி ஈழம் சாத்தியமென்று சிந்தித்து செயல்பட்டால் இளையசமுதாயம் களமாட காத்திருக்கின்றோம்.தமிழ் தேசியம் பேசும் தலைமைகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இதுவும் சாத்தியம்....


இப்படிக்கு
பா.மணிவண்ணன் முத்தரையர் 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........