14 டிச., 2012

பெற்றோர்கள்தான் முக்கியம்: ரசிகர்களுக்கு ரஜினி பிறந்தநாள் செய்தி

சென்னை: தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது   ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது   பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு  முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார்.  அப்போது செய்தியாளகள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி  நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள்  வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது.  எனது பிறந்த நாள் 12.12.2012 தேதியில் வந்து இருப்பது பெரிய விஷயம்.
என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக  கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும்  சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள்தான் முக்கியம். அவர்களை நன்றாக கவனித்துக்  கொள்ளவேண்டும்.

‘கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம்  மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும்  இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும். 

நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்போது  வருவீர்கள் என்று கேட்கிறீர்கள். அதுபற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன்.  இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை"என்றார்.
முன்னதாக  வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசிய் ரஜினி,"எனது ரசிகர்கள் அனைத்து விஷயங்களையும் நேர்மையான கண்ணோட்டத்துடனேயே அணுக வேண்டும். ‘கோச்சடையான் படம் நவீன தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் சிறப்பான வெற்றி பெற்றால் தமிழில் உள்ள இலக்கியங்கள், இதிகாசங்களை படமாக்கும் முயற்சி வெற்றி பெறும். உங்களால் நான் வாழ்கிறேன். என்னை காண்பதற்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"என்றார்.

ரஜினி பிறந்த நாளையொட்டி, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகளை செய்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.சென்னையில் உள்ள ராகவேந்திரர் கோவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, பொதுமக்களுக்கு ரசிகர்கள் பிரசாதம் வழங்கினர்.

ரஜினியும் அவரது குடும்பத்தினரும் வேண்டுமானால் இந்த பிறந்த நாளை இன்று நள்ளிரவிலிருந்தோ, நாளை காலையிலிருந்தோ கொண்டாடலாம். ஆனால் உலகம்... டிசம்பர் முதல் தேதியிலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டது. இதைப் படிக்கும்போது சற்று மிகையாகத் தோன்றலாம். ஆனால் அது முழுமையான உண்மை. டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள ரஜினியின் ரசிகர்கள் பல நல்ல காரியங்களை, நலத் திட்டங்களை தங்களால் முடிந்த அளவு செய்து வருகின்றனர்.

இலவச உடைகள் வழங்குகள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்களுக்கு நிதியுதவி, பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி, ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைத்தல் என ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 10 தினங்களாக கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுகின்றன. ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் இந்த ஆண்டு பிரதான இடம் மதுரைக்கு என்றால் மிகையல்ல.

அப்படி ஒரு தடபுடல் ஏற்பாடுகளை அந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கடந்த 10 தினங்களாக நாளொரு பேனர், போஸ்டர், கட் அவுட்டுகள். மதுரை மாநகரின் கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோக்களிலும் ரஜினி அட்டகாசமாக சிரித்தபடி உலா வருகிறார்! திருச்சியை ரஜினி ரசிகர்களின் கோட்டை என்பார்கள். ஆண்டுதோறும் ரஜினி பிறந்த மாதம் முழுக்க திருவிழாவாகத்தான் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். 

அலகு குத்துதல், தேரிழுத்தல், தீச்சட்டி ஏந்துதல், பேரணி நடத்துதல் என நாளொரு அமர்க்களம் அரங்கேறும். இந்த ஆண்டு கேட்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு திருச்சி முழுக்க ரஜினி முத்திரையை பதித்து வைத்துள்ளனர். நலத்திட்ட உதவிகளுக்கும் குறைவில்லை.

குறிப்பாக ஆதரவற்ற, மனநலம் குன்றிய மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தினசரி உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, சென்னையில் ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமான பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். 

ரஜினியின் இந்தப் பிறந்தநாளில் அவருக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒருநாள் முன்பாகவே அவருக்கு மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், கனடா, அமெரிக்காவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அந்தந்த நாட்டு அரசுகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........