23 டிச., 2012

மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன்):


இம்மன்னனைப் பற்றிய செய்திகள் செந்தலை கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாவடிவிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் சில சிதைந்துள்ளன. "வீரத்தின் உளைக்களனாக, வெற்றியின் நிலைக்களனாக வாழ்ந்த இவ்வற்றால் மறவன் களம் பல கண்டு வெற்றி பல கொண்டு போரில் பெரும் பங்கு வகித்தான்" என இராசசேகர தங்கமணி கூறுவார்.

சுவரன் மாறனுடைய செந்தலை கல்வெட்டில் சுவரன் மாறன் பாண்டியர்கள் மீதும் சேரநாட்டு அரசன் மீதும் கீழ்கண்ட இடங்களில் வெற்றி பெற்றான் என கூறபட்டுள்ளது. அவ்விடங்களாவன கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மரங்கூர், அண்ணல்வாயல், செம்பொன்மாரி, தஞ்சை செம்புல நாட்டு வென்கோடல், புகலி, கண்ணனூர் முதலியன. இவ்விடங்களில் எல்லாம் தஞ்சை, புதுகோட்டை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் உள்ளன. செந்தலை கல்வெட்டு சுவரன் மாறனால் ஆதரிக்கப் பெற்ற கவிஞர்களால் ஆக்கபெற்ற மெய்கீர்த்திகள் என்று கொண்டாலும் அவைகள் முற்றிலும் வரலாற்று உண்மைகள்.

சுவரன் மாறன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவரமனுடைய படை தலைவனுடன் சேர்ந்து மேற் கூரபெற்ற இடங்களில் வேடர்களை பெற்று பல்லவ பேரரசை நிலை பெற செய்தான் எனக்கூறலாம்.


செந்தலைதூண் கல்வெட்டு

செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் நான்கு தூண்களின் அடிப்பாகங்கள் சிதைந்து காணப்பெறுகின்றன, அவைகள் சிதையாமல் இருந்திருந்தால் 27 வெண்பாக்கள் நமக்கு கிடைத்திருக்கும், இந்த நான்கு தூண்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள், சுவரன் மாறன் நியமத்தில் பிடாரி கோயில் ஒன்று எடுபித்த செய்தியை தெரிவிக்கின்றன. மற்றும் தான் வெற்றிகொண்ட ஊர்களின் பெயர்களையும் கல்லில் வெட்டும்படி ஆனையிட்டுல்லான். அதனை சுவரன் மாறானவன் எடுபித்த பிடாரி கோயில் அவனேரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இதூங்கன் மேலேழுதின இவை" என அக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டுகளில் சுவரன் மாறன் கீழ்கண்ட பட்டங்களை மேற்கொண்டுள்ளான்.

(1 ) சிரீசத்துரு மல்லன் (2 )சிறீ கள்வர் கள்வன் (3 ) சிறீ அதிகாசன். மேலும் பத்து பட்ட பெயர்களையும் அக்கல்வேட்டுக்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன சிறீ மாறன், அபிமான தீரன், சத்துரு கேசரி, தமராளன், செருமாரன், வேலு மாறன், சாத்தன் மாறன், தஞ்சை கோன், வல்லக்கோன், வான்மாரன் முதலியனவாகும். சுவரன் மாறனை பற்றி மூன்று தமிழ் புலவர் பாடியுள்ளதாக அவனிடைய கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசில் வேல் நம்பி
கோட்டாற்று இளம் பெருமானார்
கிழார்க் கூற்றத்துப் பவதாயமங்கலத்து குவாவன் காஞ்சன்

மேற் கூறப்பெற்ற விருது பெயர்களையும், சுவரன் மாறனை பற்றிப் பாடிய புலவர்களையும் ஆதாரமாக கொண்டு இகுறுநில மன்னர் ஒரு பெரும் பேரரசனாகத் திகழ்ந்தான் என்று நடன காசிநாதன் கூறுகிறார். "முத்தரைய அரசர்களுள் இவன் பெரும் பேரரசனகத் திகழந்தவன் என்று கூறலாம். பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்மவர்மனுக்கும், சோழ மன்னர்களுள் முதலாம் ராசராசனுக்கும் பாண்டிய மன்னர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் இவனை ஒப்பிடலாம். தமிழ் புலவர்களை ஆதரித்து தனது வெற்றிகளை குறிக்கும் செய்திகளை வெண்பாக்களில் எழுதி பொரிக்க செய்த செய்கையால் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் அனைவரையும் இவன் விஞ்சி நிற்கிறான்".

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........