19 டிச., 2012

அரசுப்பணி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு மாநிலங்களவையில் மசோதா வெற்றி


துதில்லி, டிச. 17-
அரசுப் பணி பதவி உயர் வுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதத்தில் அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்து மாநிலங் களவையில் அரசு கொண்டு வந்த 117வது திருத்த மசோ தா, திங்களன்று வாக் கெடுப்பில் நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு எதி ராக முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி நாடா ளுமன்றத்தின் இரு அவை களிலும் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்திய போதிலும், சமூக நீதி காக் கும் கோட்பாட்டை உயர்த் திப்பிடிக்கும் விதமாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு மசோதா நிறைவேறியது.
திங்களன்று மாநிலங் களவையில் மாலை 6 மணி யளவில் நடைபெற்ற வாக் கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 206 வாக்குகள் பதிவாகின. மசோதாவுக்கு எதிராக 10 வாக்குகள் பதிவா கின. எனவே பெரும் பான் மை உறுப்பினர்களின் ஆத ரவோடு மசோதா நிறை வேறியது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........