22 ஜூன், 2012

முத்தரையர்,முத்தரையர் வரலாறு


history of mutharaiyar

முத்தரையர் வரலாறு ;-
-------------------------------------------------------------------------------------


தற் காலத்திய திருச்சி ,தஞ்சை ,புதுகோட்டை  மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர் .இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது .திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும் .இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது .செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி ,உமையவள் ஆற்காடு ,வல்லம் ,தஞ்சை ,முதலிய பகுதிகள் முதராவ்யரின் தலை நகரத்தில் அடங்கி இருந்ததாக தெரிகிறது திருகாட்டு பள்ளி நியமம் ,விஷ்ணம்பேட்டை,இளங்காடு கூடநாணல்   கூழாக்கி  ஆற்காடு ,விண்ணமங்கலம் ,பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன .செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது ,தஞ்சை ,வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன . 


முற்கால முத்தரையர்;-
--------------------------------------


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தண்டரம்பட்டில் கிடைத்த இரண்டு நடுகல் கல்வெட்டுகள் பொன்மாந்தனார் என்ற முத்தரைய தலைவனை பற்றி கூறுகின்றன .தமிழ் நாட்டின் வட பகுதியில் உள்ள மேற் கொவலூரை தலை நகர்க கொண்டு இந்த பொன்மாந்தனார் ஆட்சி புரிந்துள்ளார் .இந்த பொன்மாந்தனார் ,முதலாம்   நரசிம்மவர்ம பல்லவனின் சம காலத்தவன் என்பதும் கல்வெட்டுகளால் புலனாகிறது .தொண்டை மண்டலத்திலுள்ள செங்கம் பகுதி இவனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .இக்குறு நிலா மன்னன் தமது அண்ணன் மகனான வானகோ முத்தரையர்என்பவரால் போரில் தோற்கடிக்கப்பட்டதாக தெரிகிறது .பல்லவ முதலாம் நரசிம்ம வர்மனின் ஏழாம் ஆட்சியாண்டில் வானகோ முத்தரையர் ,பொன்மாந்தரையரை தாக்கியுளதால் இவனது ஆட்சியாண்டு கி .பி 637  இல் முடிவுற்றதாக கருதலாம் .இவனது ஆட்சி கி.பி.630 முதல் 637  முடிய நீடித்ததாக ஊகிக்கலாம் .     



0 comments:

Post a Comment



கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது