16 ஜூன், 2012

புதுக்கோட்டை "ரிசல்ட்': அமைச்சர்கள் கலக்கம்

சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருந்தாலும், தே.மு.தி.க., டெபாசிட்டை தக்கவைத்ததால், அமைச்சர்கள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது. தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள், தேர்தல் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த போதும், முழுமையாகக் கொண்டாட முடியாமல் உள்ளனர்.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, வேட்பாளரை அறிவித்து, பிரசாரத்தை அ.தி.மு.க., தொடங்கியது. 32 அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.பி.,க்கள், மூத்த நிர்வாகிகள் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. தொகுதியை, வார்டு வாரியாகப் பிரித்து, அமைச்சர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும், பிரசாரப் பொறுப்பு அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில், பெரும்பாலும், அ.தி.மு.க.,வினரே பதவியில் இருப்பதால், மிக எளிதாக, வாக்காளர்களை அணுகும் வாய்ப்பு அ.தி.மு.க.,வினருக்கு இருந்தது. மேலும், புதுக்கோட்டை நகராட்சியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, 50 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை என, தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டி, தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள், தேர்தலை புறக்கணித்தன. சட்டசபையில் எதிர்க்கட்சியாக உள்ள தே.மு.தி.க., நீண்ட ஆலோசனைக்கு பிறகே வேட்பாளரை 
அறிவித்தது. மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே, தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரம் மேற்கொண்டது.இந்நிலையில், அ.தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் நேரடி போட்டி நிலவியது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா ஆகியோர், புதுக்கோட்டையில் முகாமிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் ஜெயலலிதா, ஒரு பிரசாரத்தை புதுக்கோட்டையில் செய்தார்.
ஜெ., வேண்டுகோள் நிறைவேறவில்லைஅப்போது, எதிர்க் கட்சிகள் அனைத்தும், டெபாசிட் இழக்க வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர், 71 ஆயிரத்து 499 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நேரடி போட்டியைச் சந்தித்த, தே.மு.தி.க., வேட்பாளர் ஜாகிர் உசேன், 30 ஆயிரத்து 500 ஓட்டுகள் பெற்று, டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டார்.
இதன் மூலம், ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற அ.தி.மு.க., கனவு கலைந்ததோடு, எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பும் நிறைவேறவில்லை. முதல் முறையாக, தே.மு.தி.க., இடைத்தேர்தலில் டெபாசிட்டை பெற்றுள்ளது.
அச்சத்தில் அமைச்சர்கள்
இது, அ.தி.மு.க., அமைச்சர்கள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 அமைச்சர்களுக்கும், வார்டு வாரியாக தொகுதி பிரித்து ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதிகளில், அ.தி.மு.க.,வை விட தே.மு.தி.க., அதிக வாக்குகளை பெற்றிருந்தால், அதற்கு, அமைச்சர்களே பொறுப்பாவர். இதனால், தங்களது அமைச்சர் பதவிக்கு, ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம், அமைச்சர்கள் மத்தியில் உள்ளது.
புதுக்கோட்டை பிரசாரத்தில் மட்டும் அல்லாமல், சட்டசபை கூட்டத் தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துடன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நேரடி மோதலின் போது, பொதுத் தேர்தலில் யாரால், யார் வெற்றி பெற்றோம் என்பது பற்றி, ஆக்ரோஷமான விவாதம் நடந்தது.
அப்போது, தே.மு.தி.க., ஆதரவில், அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை என, முதல்வர் கூறினார். மேலும், "தைரியமிருந்தால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, டெபாசிட்டை தக்க வைக்க முடியுமா என பாருங்கள்' என்று, விஜயகாந்துக்கு சவாலையும் ஜெயலலிதா விடுத்தார். சவாலின்படி, சங்கரன்கோவிலில், தே.மு.தி.க.,வின் டெபாசிட்டை, அ.தி.மு.க., இழக்கச் செய்தது.
வித்தியாசம் குறைந்ததுஇதே சவாலைத் தான், புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும், தே.மு.தி.க., சந்தித்தது. ஆனால், டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. அ.தி.மு.க., எதிர்பார்த்த, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசமும் கிடைக்கவில்லை. இதற்கு, தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களே பொறுப்பாவர் என்பதால், அமைச்சர்கள் மத்தியில், கலக்கம் 
நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது