24 ஜூன், 2012

முத்தரையர் ,முத்தரையர் கல்வெட்டுகள்


குடுமியான்மலை குடைவரை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலும், அதன் பின்புறம் உள்ள குடைவரையும், அதன் அருகிலுள்ள இசைக்கல்வெட்டும் மிகச்சிறப்பு வாய்ந்தவை. குடுமிநாதர் கோவில் சிற்பங்கள் மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.மாலிக் காபூரின் படையெடுப்பில் சில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன.
குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டத்தில், குளத்தூர் வட்டத்திலே உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை வழியாக திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். கிழக்கே 10 கி.மீ தொலைவில் ஓவியக்கலைக்கு புகழ் வாய்ந்த சித்தன்னவாசலும், மேற்கே 25 கி.மீ தொல்வில் கலை மிக்க கொடும்பாளூர் உள்ளது. இக் குடுமியான்மலை தன் வரலாற்றில் வேறு பெயர்களும் கொண்டு இருந்தன. அவற்றுல் திருநிலக்குன்றம் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) , திருநலக் குன்றம் (கி.பி. 8ஆம் நூ) , சிங்கா நல்லூர் (இரண்டாம் இராசராசன் காலம், 12 ஆம் நூற்றாண்டு) என்பன சில.
குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர் அறிஞர். திருமெய்யம்மலையடிபட்டி என்னும் ஊர்களிலும், இக்குடுமியான்மலையில் உள்ளதைப்போல் இசைக் கல்வெட்டுகள் உள்ளன. குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டில் உள்ள இசை நுணக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை. இவை தமிழிசையே என்பார் யாழ்நூல்என்னும் இசை நூல் எழுதிய விபுலானந்த அடிகள் . கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுத்ததாகக் கருதப்படும் பரத முனிவரின் இசை நூலும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் சங்கீத ரத்தினாகரத்திற்கும் இடைப்பட்ட காலத்திய இசைச் செய்தி என்பதால், இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது