20 ஜூன், 2012

560 புதிய பஸ்கள்: ஜெ. தொடங்கினார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை :அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 560 புதிய பஸ்கள் மற்றும் 266 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் ஓப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினந்தோறும் 19,509 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றின் மூலம் சுமார் 2.10 கோடி பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஆண்டுதோறும் புதிய பஸ்கள் வாங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 560 புதிய பஸ்கள் மற்றும் 266 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் என மொத்தம் 826 பஸ்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தலைமைசெயலகத்தில் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய பஸ்கள் 304 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 70 புதிய பஸ்கள் அளிக்கப்பட்டது. விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 155 புதிய பஸ்களும், 22 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் வழங்கப்பட்டன. விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 68 புதிய பஸ்களும், 51 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும், 

சேலம் போக்குவரத்து கழகத்துக்கு 53 புதிய பஸ்களும், 25 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் அளிக்கப்பட்டது. கோவை போக்குவரத்து கழகத்துக்கு 71 புதிய பஸ்களும், புதுப்பிக்கப்பட்ட 38 பஸ்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு 79 புதிய பஸ்களும், 54 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் அளிக்கப்பட்டது. மதுரை போக்குவரத்து கழகத்துக்கு 43 புதிய பஸ்களும், 54 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் ஒப்படைக்கப்பட்டன. நெல்லை போக்குவரத்து கழகத்துக்கு 21 புதிய பஸ்களும், 22 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் அளிக்கப்பட்டுள்ளது. 9157 பேருக்கு பணிநிரந்தர ஆணை: திருவண்ணாமலை மண்டலத்தில் மட்டும் தினந்தோறும் 554 பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே நிர்வாக வசதியை கருதி ரூ.94.45 லட்சம் செலவில் புதிய தலைமை அலுவலகத்தை முதல்வர் திறந்துவைத்தார். மேலும், ஓய்வு பெற்ற 2,316 பேருக்கு ரூ.47.41 கோடியில் ஓய்வூதிய பலன¢களை வழங்கினார். வாரிசுதாரர்கள் 400 பேருக்கும், இறந்துபோன போக்குவரத்து ஊழியர்கள் வாரிசுதாரருக்கு 338 பேருக்கும் பணிநியமன ஆணை முதல்வர் வழங்கினார். 9,157 போக்குவரத்து ஊழியர்களுக்கு பணிநிரந்தர செய்வதற்கான ஆணையும் வழங்கினார். இலவச பஸ் பாஸ் விநியோகம் தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் ஸ்மார்ட் கார்டு முறையை முதல்வர் தொடங்கிவைத்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 30.36 லட்சம் மாணவர்களுக்கு இது அளிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது