10 ஜூன், 2012

முத்தரையர்

இளையான்குடி : 50 கிராம மக்கள் அவதி 
இளையான்குடி அருகே உள்ளது மஞ்சள்பட்டணம். இந்த ஊர் பரமக்குடி- தெ.புதுக்கோட்டை மானாமதுரை சாலையில் முள்ளியரேந்தல் செல்லும் வழியில் உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் மஞ்சள்பட்டிணத்தில் உள்ள சிதைந்து போன பொதுப்பணித்துறை பாலத்தை சீரமைக்கவும், புதிய பாலம் கட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பபட்டது.
 
அதன்பிறகு அந்தப் பாலம் உட்பட்ட சம்பந்தப்பட்ட கால்வாய் தூர்வாரி அதன் இடையே உள்ள சில பாலங்களும் சேர்க்கப்பட்டு சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் பணி தொடங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணிகள் தொடங்கப்படாமல் நின்று விட்டன.
 
இந்த பாலம் கட்டப்பட்டால் முள்ளியேரந்தல், முனை வென்றி, நெடுங்குளம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சுமார் 50 கிராம மக்கள் பயன் அடைவர்.
 
அதுமட்டுமின்றி தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு தினம் போன்ற விழாக் காலங்களில் மாற்று பாதை வழியில் பஸ்களை விடும்போது, இந்த வழியாக விடலாம். 

இதனால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்வது தடுக்கப்படும்.    எனவே மாவட்ட நிர்வாகத்தினர் தனி கவனம் செலுத்தி விரைவில் இந்த பாலத்தை கட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுப்பற்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இளையான்குடி ஒன்றிய தி.மு.க.செயலாளருமான சுப.மதியரசன்,
 
’’நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, சட்டமன்றத்தில் இந்த பாலத்தின் தேவை குறித்துப் பேசி அப்போதைய முதல்வர், துணை முதல்வரிடம் மனு அளித்தேன். பின்னர் மண் பரிசோதனைக்காக ஆழ்குழாய் போட்டு மண் மாதிரியெல்லாம் எடுத்து அதிகாரிகள் பால மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பினார்கள்.
 
பாலம் இருக்கிற பகுதி ராமநாதபுரம் மாவட்டம். சாலை இருக்கிற பகுதி சிவகங்கை மாவட்டம். எனவே மஞ்சள்பட்டணம் பாலம் மற்றும் இதன் வழியே உள்ள கால்வாய் மற்றும் இதன் வழியே செல்லும் பாலம் உட்பட 100 கோடி மதிப்பீட்டில் டெண்டர் நடக்க உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையில் இருந்து தகவல் வந்தது.
 
இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த பணி பாதியில் நிற்கிறது. விரைவில் இப்பணி தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
  
 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது