28 ஜூன், 2012

முத்தரையர்

 செந்தலை முத்தரையர் மாளிகை:


காஞ்சிமீது படையெடுத்து வந்து, அந்நகரைக் கைப்பற்றிய சாளுக்கிய (முதலாம்) விக்கிரமாதித்தன், உறையூரின் சோழ மாளிகையில் வந்து தங்கி, மதுரை இளவரசன்  கோச்சடையானை வரவழைத்து நட்பு பேச எண்ணுகிறான். சாளுக்கிய சேனையிடம் சிக்கிய நாடோடிப் பெண் பதுமகோமளை, அரசவையில் ஆடமறுத்து அடிபடுகிறாள்.  அவளை அன்றிரவு கோச்சடையான் விருப்பப்படி, அவனுடைய தனியறையில் கொண்டுவிடுகிறார்கள். அங்கு அவள் பாண்டிய குமாரன் மீது கத்தி வீசுகிறாள். ரணம்,  வலி தாங்கிய கோச்சடையான், அவள் யாரென்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அங்கிருந்து அவள் தப்பிச் செல்ல உதவுகிறான். இனி...
கொங்குவேளின் புதல்வி, இளவரசி ரங்கபதாகை, அந்த மனிதரை மிகுந்த பரிவுடன் நோக்கினாள். மூர்ச்சித்த நிலையில் மஞ்சத்தில் கிடந்த அவர் எப்போது கண்விழிப்பார்  என்பது அவளுடைய கவலையாக இருந்தது.
ஐம்பது வயதிற்குக் குறையாத அப்பெரியவரின் தோற்றம், பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய கம்பீரத்துடன் உள்ளது. முகத்தில் நரை கலந்த தாடி மீசை, தலையில்  அழகிய பட்டுத் தலைப்பாகை. யாருடனோ கடுமையாகப் போரிட்டிருக்க வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்திருந்தன. மார்பிலும் புஜங்களிலும் வாட் கீறல் கள் பட்டு, பெருகிய குருதிகள் - காய்ந்து போன ரணங்கள்.

அன்று பிற்பகலில், செந்தலை முத்தரையர் மாளிகையிலிருந்து அவள் ரதத்தில் வந்து கொண்டிருந்தாள். வழியில் ஓரிடத்தில் ஒரு கருநீல வண்ணப் புரவி சாய்ந்து கிடந்த து. அதன்மீதும் ஈட்டிகள் பாய்ந்த ரணங்கள். அருகே இந்த மனிதர் விழுந்து கிடந்தார்.


ரங்கபதாகை தன் வீரர்களை அனுப்பி, என்ன ஏதுவென்று பார்க்
கச் சொன்னாள். குதிரைக்கும் உயிர் இருந்தது. இவரும் மூர்ச்சித்துக் கிடந்தார். உடனே பாதுகாப்புடன்  இங்கு கொண்டு வந்தனர்.

எவ்வளவோ ஆசுவாசப்படுத்தியும் அப்பெரியவர் நெடு நேரமாகக் கண்திறவாமலே கிடந்தார்.

இதோ கண் திறக்கிறார்.

‘‘நா...ன்... எங்கே இருக்கிறேன். இது எந்த இடம்...?’’ என அவர் வாய் முனகுகிறது.

‘‘ஐயா, இது கருவூரில் உள்ள கொங்குவேளின் அரண்மனை. நான் அவருடைய புதல்வி ரங்கபதாகை. வழியில் மயங்கிக் கிடந்த தங்களை நான்தான் தூக்கிவரச் செய்து,  காயங்களுக்கு மருந்திடச் செய்தேன். தங்கள் அசுவம் நல்ல நிலையில், பத்திரமாக இருக்கிறது. எந்தக் கவலையும் வேண்டாம். தாங்கள் யார்? என்ன நிகழ்ந்தது? எங்கி ருந்து வருகிறீர்கள்? சற்று விவரமாகச் சொல்லுங்களேன்...’’ என வினவினாள் ரங்கபதாகை.

அவளுக்கு அந்த மனிதரின் முகம் மிகவும் பரிச்சயமானது போன்று இருந்தது. ஆனால் எங்கே, எப்படி என்பது ஒன்றும் புரியவில்லை.

‘‘மிக்க நன்றியம்மா. நீ செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். கொங்குவேள் எங்கே... நான் அவரைப் பார்க்க வேண்டுமே...?’’

‘‘அப்பா, மதுரை சென்றுள்ளார். தமிழ் நிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேச அவரை அவசரமாக அழைத்தாராம் பாண்டிய மன்னர். தாங்கள் யாரென்று  இன்னமும் சொல்லவில்லையே.... தங்களுக்கு என்ன நிகழ்ந்தது? ஏன் இத்தனை வாட் காயங்கள்...?’’

‘‘நான் ஒரு இரத்தின வணிகன். பெயர் உக்கிரதண்டன். விளந்தை நகரில் ஒரு சத்திரத்தில் தங்கியபோது, என்னிடம் இரத்தினங்களை விலைபேச இருவர் வந்தனர். பிறகு தான் தெரிந்தது அவர்கள் கொள்ளையர் என்பது. நான் தப்பித்து ஓடிவந்தேன். காவிரிக் கரையில் அவர்கள் என்னை வழிமறித்துத் தாக்கினர். விலைமதிப்பற்ற என் இரத் தினங்கள் பறிபோயின. கடுமையாகப் போரிட்ட நான் அங்கிருந்து உயிருடன் தப்ப என் புரவிதான் உதவியது. நெடுந்தூரம் ஓடிவந்த களைப்பால், அசுவம் ஒரு மேட்டுப்  பாதையில் ஏறும்போது கால் இடறிக் கீழே விழுந்துவிட்டது. நான் மூர்ச்சித்துப் போனேன்.’’

‘‘சரி ஐயா. நீங்கள் மிகவும் களைப்பு மாறாமல் இருக்கிறீர்கள். ஒரு கவலையும் இல்லாமல் உண்டு, உறங்குங்கள். மற்ற விவரம் நாளை பேசலாம்...’’

‘‘இல்லையம்மா. நான் உடனே புறப்படவேண்டும். உன் தந்தை இங்கு இல்லாத நிலையில் நான் தங்குவது முறையல்ல. இப்போது என் மூர்ச்சையும் தெளிந்துவிட்டது. எ ன்னைப் போகவிடு...’’

‘‘அ
தெல்லாம் முடியாது. உடல் நிலை பூரணமாகக் குணமாகும்வரை தாங்கள் இங்குதான் தங்கவேண்டும்...’’ என ரங்கபதாகை அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தபோதே  அந்த அரண்மனை பரபரப்பு அடைந்தது.

அடுத்த கணம் அங்கே, ‘‘அம்மா ரங்கபதாகை, நீ பத்திரமாக வந்து சேர்ந்தாயா...? யாருடைய உடல்நிலை பூரணமாகக் குணமாகும்வரை இங்கே தங்கவேண்டுமென்று  கூறுகிறாய்? யார் அது?’’ என்று பேசியவாறே வந்து நின்ற கொங்குவேள், அங்கே மஞ்சத்தில் சாய்ந்து கிடந்தவரைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்துபோனார்.

‘‘பிரபு! தாங்களா.... தங்களுக்கு என்ன நேர்ந்தது...?’’ என்ற சொற்கள் அவரிடமிருந்து பதற்றத்துடன் வெளிப்பட்டன.

தான் காப்பாற்றியது யாரை என்பது தெரிந்தவுடன் இளவரசி ரங்கபதாகை, பிரமித்துப்போனாள்.

பதும கோமளை என்கிற அந்த நாடோடிப் பெண்ணை உறையூர் அரண்மனையிலிருந்து தப்பிச் செல்லுமாறு கூறி, இரகசிய நிலவறை வழியைக் காண்பித்த பாண்டிய இ ளவசரன் கோச்சடையான், அவள் அவ்வழியே சென்றபின், சுவரோவியத்தை மீண்டும் நகர்த்தி அந்த நிலவறையின் முகப்பை மூடிவிட்டு, மஞ்சத்தில் வந்து சாய்ந்தான்.  நீண்ட நேரம் கழித்தே, ‘ஆ... ஊ....’ என அலறல் குரல் எழுப்பினான். காவலர்கள் உள்ளே ஓடி வந்தனர்.

அடுத்த கணம், உறையூர் அரண்மனையே பரபரப்படைந்தது. சிறிது நேரத்தில் சாளுக்கிய வேந்தன் (முதலாம்) விக்கிரமாதித்தன் அங்கு வந்து சேர்ந்தான்.

‘‘இளைய பாண்டியா! என்ன விபரீதம் இது! எப்படி நிகழ்ந்தது இது? எங்கே அந்த நாடோடிப் பெண்... இங்கிருந்து எப்படித் தப்பினாள் அவள்...? நேற்றுதான் அவளைப்  பிடித்து வந்தோம். நீ அவள்தான் வேண்டுமென்று அடம் பிடித்தாய். பார், என்னவெல்லாம் நிகழ்ந்துவிட்டது! உன் உயிருக்கு ஏதும் அபாயம் நிகழ்ந்திருந்தால், பழி என்  தலை மீதல்லவா விழும்! பாண்டிய மன்னர் மாறவர்மன் அரிகேசரி நெடுமாறருக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன்...?’’ எனப் பதறினார்.

‘‘விக்கிரமாதித்தரே, வீண் கவலை எதற்கு? என் உயிருக்கு அத்தனை எளிதில் ஆபத்து வந்துவிடுமா என்ன? அந்த நாடோடிப் பெண் விஷயத்தில் நான் சற்று  கவனக்குறைவாக இருந்துவிட்டது உண்மைதான். அவளை உங்கள் வீரர்கள் சரியாகப் பரிசோதிக்காமல் விட்டிருக்கிறார்கள். நடந்தாலே குடையாய் விரியும் அவள்  பாவாடையின் மடிப்புகளில் எங்கோ இந்தக் கத்தியை மறைத்து வைத்திருக்கிறாள். நான் எதிர்பாராத தருணத்தில் சரேலென எடுத்து வீசிவிட்டாள்.

ஒன்று சொல்கிறேன், நீங்கள் நம்புவீர்களோ என்னவோ! என் மீது கத்தி வீசிய அவள், திடீரென இந்த வாயில் கதவைத் திறந்துதான் ஓடினாள். காவலர்கள் அவளை ஏன்  பாய்ந்து பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை, அவளுக்கு உதவ இங்கு யாராவது இருக்கிறார்களோ என்னவோ! நான் பயணக் களைப்பாலும், குருதிச்  சேதாரத்தாலும் சிறிது கண் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். விழித்ததும் வலி தாங்காமல் அலறினேன். பிறகு நடந்தது தாங்கள் அறிந்ததே....’’

‘‘கோச்சடையா, என்னால் இங்கு நடந்த எதையுமே நம்ப முடியவில்லை. நீ எவ்வளவு பெரிய மாவீரன்... உன்மீதே கத்தி வீசி விட்டு ஒருத்தி தப்பியிருக்கிறாள் என்றால்,  அவள் சாதாரண நாடோடிப் பெண்ணாக இருக்க முடியாது! என் ஆட்
களை விசாரிக்கிறேன். அவள் தப்ப உதவியவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனைதான். அந்தப்  பெண் அவ்வளவு எளிதில் தப்ப முடியாது. நிச்சயம் அகப்படுவாள். அவள் நினைத்தே இராத வகையில் பாடம் கற்பிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தன், மருத்துவரை  அழைத்து வரச் செய்து, இளையபாண்டியன் புஜத்தில் கட்டுப்போட வைத்தான். பிறகு காவலை பலப்படுத்திவிட்டுச் சென்றான்.

சாளுக்கிய புலிகேசியின் புதல்வன் விக்கிரமாதித்தன், அத்தனை சாமர்த்தியம் குறைந்தவனா என்ன! அவன் காஞ்சியில் அதாகதம் செய்தபின், உறையூர் அரண்மனையில்  வந்து தங்கியதே, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதில் அமர்ந்து, கடல்போன்ற தன் சேனைகளால் பலப்படுத்திக் கொண்டுவிட்டால், மதுரையை மிரட்டிப் பணிய  வைக்கலாம் அல்லது பாய்ந்து தாக்கலாம் என்பதால்தானே? அதனால் அங்குள்ள இரகசிய நிலவறைப் பாதைகளைத்தான் முதலில் கண்டறியச் செய்திருந்தான்.  கோச்சடையான் அந்த அறையில்தான் தங்குவேன் என விருப்பம் தெரிவித்ததுமே நிலவறையின் மறுமுனை சாளுக்கிய வீரர்களின் கண்காணிப்பின் கீழ் வந்திருந்தது.  அதன் வழியே தப்பிச் செல்ல முயன்ற பதுமகோமளை அன்றிரவே மீண்டும் சிறைப்பட்டுவிட்டாள்.

ஆனால், அவள் அகப்பட்ட செய்தி யாருக்கும் தெரியக்கூடாது என்று சாளுக்கிய வீரர்களுக்கு உத்தரவிட்டான், விக்கிரமாதித்தன். காரணம், அவளைத் தன் அறைக்கு  அனுப்புமாறு ஏன்  அத்தனை வற்புறுத்திக் கேட்டான் கோச்சடையான் என்பது அவனுக்குப் புரியாதிருந்தது. மேலும், இளையபாண்டியனின் உதவியின்றி அப்பெண்  அங்கிருந்து இரகசிய நிலவறை வழியே தப்பிச் செல்ல முயன்றிருக்க முடியாது என்பதும் அவனுடைய தீர்மானமாய் இருந்தது. வாசல் வழியேதான் அவள் தப்பி  யோடினாள் என்பது சுத்தப் பொய் என்பதும் விசாரணைகளால் ஊர்ஜிதமாகியிருந்தது.

அந்த நாடோடிப் பெண் உண்மையில் யார்? கோச்சடையான் அவளைத் தப்ப வைக்க முயன்றது ஏன்?

இந்தக் கேள்விகள் விக்கிரமாதித்தனின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன..

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது