21 ஜூன், 2012

முத்தரையர்:ரயில்வேயில் 12,042 டெக்னீஷியன் பணியிடங்கள்


விண்ணப்பிக்க ஜூலை 16 கடைசி நாள்

ரயில்வே போர்டுகள் பல வற்றிலும் டெக்னீஷியன் நிலையில் 12 ஆயிரத்து 42 காலி பணியிடங்களுக்கு ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் மூலம் ஆட் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எழுத்து தேர்வு டிசம்பர் 16ம் தேதி நடத்தப்பட உள்ளது. விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 16 ஆகும். வயது வரம்பு 1.7.2012 அன்று 18 முதல் 30 வயது வரை. பட்டியல் வகுப்பினருக்கு 5ம், ஓபிசிக்கு 3ம் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

முன்னாள் படைவீரர் உள்ளிட்ட தகுதியுடைய வர்களுக்கு விதிமுறைப் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

எழுத்து தேர்வு, சான் றிதழ் சரிபார்ப்பு அடிப் படையில் பணியாளர் தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்கின்ற மொழியை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

ஆங்கிலம், இந்தி தவிர குறிப்பிட்ட மாநில மொழிகள் சம்பந்தமான விபரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் டெக்னீஷியன் சிக்னல் கிரேடு&2: 5200&20200 மற்றும் கிரேடு பே 2400 ரூபாய். இதர பிரிவுகளுக்கு 5200&20200 மற்றும் கிரேடு பே 1900 ரூபாய்.

தேர்வு கட்டணம் டெக்னீஷியன் கிரேடு&2க்கு ரூ.60. இதர பிரிவுகளுக்கு ரூ.40. பெண்கள், பட்டி யல் வகுப்பினர், முன் னாள் படைவீரர், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் (ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள வர்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியவர் களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. உரிய படிவத்தில் வருமான சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவம் ரயில்வே இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏ&4 அள வில் 80 ஜிஎஸ்எம் பாண்ட் காகிதத்தில் விண்ணப்ப படிவமும், இன்பர்மேஷன் ஷீட்டும் தயார் செய்ய வேண்டும்.

விண்ணப் பங்கள் சம்பந்தப்பட்ட டிவிஷனுக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப் படுகின்ற ரயில்வே போர்டுகளில் பதிவு உண்டு.
 ·  ·  · 18 மணி நேரம் முன்பு

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது