20 ஜூன், 2012

முத்தரையர்

புதுக்கோட்டை இடைத்தேர்தல் அதிமுக எம்எல்ஏ பதவி ஏற்பு:
சென்னை :புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கார்த்திக் தொண்டமான் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏவாக இருந்த முத்துக்குமரன், சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து, தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் போட்டியிட்டனர். இதில் கார்த்திக் தொண்டமான் வெற்றி பெற்றார். அவர் எம்எல்ஏவாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.  சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் மதியம் 12.10 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் ஜெயக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் ஜெயலலிதாவிடம் கார்த்திக் தொண்டமான் ஆசி பெற்றார். இதில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது