12 ஜூன், 2012

எங்க தலைவரின் அன்பு

கேன்சர் பாதித்த இளைஞனிடம் ரஜினி காட்டிய அன்பு!











கேன்சர் பாதித்த இளைஞனிடம் ரஜினி காட்டிய அன்பு!

அந்த இளைஞன் பெயர் கார்த்திக். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர். அவருக்கு கேன்சர்!
கீமோதெரபி எல்லாம் வேலை செய்யவில்லை. பெரிய அறுவைச் சிகிச்சை செய்வது ஒன்றுதான் வழி என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.
கார்த்திக்கு தெரிந்த ஒரு உதவி இயக்குநர் மூலம் விஷயம் தலைவர் காதுக்குப் போனது. உடனே அவர் கேட்டது, “கார்த்திக்கை நானே நேரில் பார்க்கிறேன்… மருத்துவமனைக்கு போகலாமா..” என்பதுதான்.

“வேண்டாம்… நாங்களே கார்த்திக்கை உங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வருகிறோம்”, என கார்த்திக்கின் உறவினர்கள் சொல்லிவிட, ஒரு நாளைக் குறிப்பிட்டு அழைத்து வரச் சொன்னார் ரஜினி.
குடும்பத்துடன் ரஜினியின் அலுவலகத்துக்கு வந்தார் கார்த்திக். உடனே எழுந்து வாசலுக்குப் போன ரஜினி, அப்படியே கார்த்திக்கை தூக்கிக் கொண்டார்!

தனது இருக்கைக்குப் பக்கத்தில் கார்த்திக்கை உட்கார வைத்துக் கொண்டவர், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். கார்த்திக்கின் டைரியில் ஆட்டோகிராப் போட்டார். சிவாஜி மொட்ட பாஸ் நினைவுச் சின்னத்தைப் பரிசளித்தார்.
பின்னர் அந்த இளைஞன் விரும்பியபடியெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார் ரஜினி. யாரும் இதுவரை அந்த அலுவலகத்தில் அப்படி ரஜினியுடன் படம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவ்வளவு க்ளிக்குகள்!

அந்த குடும்பத்தினருடன் அவர்களின் மொழியிலேயே (தெலுங்கு – கன்னடம்) பரிவாக தலைவர் பேச, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதனர். கார்த்திக் உடல்நிலை தேற பிரார்த்திப்பதாகக் கூறிய ரஜினி, எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறி, ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தார்.
ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்த மனத் திருப்தியுடன், வாழ்க்கையில் பெரிய விஷயம் ஒன்றைச் சாதித்துவிட்ட மகிழ்ச்சியுடன்…. கேன்சரிலிருந்து மீளவே முடியாமல் பத்து தினங்களுக்கு முன் கார்த்திக் காலமாகிவிட்டார்.

இந்தத் தகவல் இன்னும் தலைவரிடம் சொல்லப்படவில்லை!

இந்த விசையத்தை நண்பர்கள் மற்றும் இயக்குனர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள் .... இந்த பதிப்பு தலைவரிடம் செல்லவேண்டும்.... 




போற்றி பாடடி பெண்ணே
ரஜினி காலடி மண்ணே

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது