19 பிப்., 2013

ref:https://www.facebook.com/groups/mutharaiyar/


வணக்கம் உறவுகளே..!!

கடந்த வாரம் நமது சமூகத்தின் துடிப்புமிக்க வழக்கறிஞர். புதுக்கோட்டை கண்ணனை நம் கண் முன்னே பலிகொடுத்து நிற்கிறோம், தொடர்ந்து திட்டமிட்டு நம் இனம் தமிழகத்தின் எதேனும் ஒரு மூலையில் ஏதோ ஒருவகையில் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டே இருக்கிறது, நாமும் நிறைய நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசி பேசியே நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம், பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது,

இந்தபாதிப்புகளிலிருந்து நம் இனம் காப்பாற்றப் பட என்ன செய்ய வேண்டும் ? நம்முடைய வளர்ச்சி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது ? அவர்களை எதிர் கொள்ள அல்லது அவர்களிடமிருந்து நமது இனம் காப்பாற்றப் பட என்ன வழி ? சற்று விரிவான, விவேகமான திட்டமிடுதல் நமக்கு தேவை.

இந்த தருனத்தில் நமது சமூகத்தவரிடம் உரிமையுடன் வேண்டுகிறோம், எங்கேயும், எப்போதும் பிரச்சனைகளில் தனி மனிதர்களை முன்னிலைப் படுத்தாதீர்கள், அதற்க்கான அவசியம் நமக்கு கிடையாது நமக்கு தலைவராக, தெய்வமாக, மன்னராக "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" இருக்கிறார், அவரின் நாமம் சொல்லி ஒருங்கிணைவோம், அதுதான் நாளை நமக்கு பாதுகாப்பான வாழ்வினை தரும் என்பது எனது தாழ்மையான கருத்து, ஒவ்வொரு தனி மனிதர்களின் சேவையும், தொண்டும் நமக்கு நம் இனத்திற்க்கு தேவை, அதே நேரம் அவர்களின் விலை மதிக்க முடியாத உயிரும், அவர்தம் குடும்பமும் இனத்திற்க்காக அழிவது என்பது ஏற்புடையது அல்ல,

நல்ல விசயங்களில் நம் தலைவர்களை, வளர்ந்து வரும் தலைவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதே நேரம் பிரச்சனைகளின்போது தனி மனிதர்களை அடையாளப்படுத்தாதீர்கள், பிரச்சனைகளின் போது யார் நம்மை ஒருங்கிணைப்பது, யார் நமக்கான ஆலாசனைகளை தருவது என்பது போன்ற விசயங்களை வெளியே தெரியாமல் எந்த தனி நபர் சாராமல் (அல்லது அவரின் பெயர் தெரியாமல்..) ஒருங்கிணைவது அவசியம், இல்லாத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட நபரை நாம் இழந்துவிடும் அபாயம் இருகின்றது அதனை தவிர்க்க வேண்டும், ஒன்றல்ல நம்மில் எல்லோருக்குமே தலைவர்களாகும் தகுதி இருக்கிறது, காரணம் நாம் நாடாண்ட பரம்பரை,

ஆகவே இப்போதைய நமது தேவை தலைவர்கள் அல்ல....!! விழிப்புணர்வு...!!!! அதை முகம் தெரிந்தோ, தெரியாமலோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி நம்முடையது. அனாவசியமான ஆடம்பரங்களும், அர்த்தமில்லாத சண்டைகளும், விவேகம் இல்லாத வீரமும், திட்டமிடாத செயல்களும் பயன் இல்லாமல் போய்விடும், நிதானமாக, விவேகமாக உணர்வுகளை விதையுங்கள், அதற்க்காக கோழையாக இருங்கள் என்று அர்த்தமில்லை... வீரனாய் இருங்கள், விவேகமான வீரனாய் இருங்கள், எதையும், யாரையும் இழக்காமல் நமது இலக்கினை அடைந்தோம் என்றால் அதுதான் வெற்றி...!! இனத்தின் வெற்றி...!!!

மீண்டும் பெரும்பிடுகு முத்தரையரின் நாமம் சொல்லி முடிக்கும்...

என்றும் சமூகப் பணியில்...

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது