25 செப்., 2012

வெற்றி கரமாக நடந்த முத்தரையர் இணைய சந்திப்பு


முத்தரையர் இணைய சந்திப்பு திருச்சி ல் செப்டம்பர் 23  அன்று நடைபெற்றது அதற்க்கு சமுதாய புரவலர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர் .

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முதலியோர் பங்கேற்றனர் .பல மாவட்டங்களில் இருந்து வந்தனர்.திருச்சி,கரூர்,வேலூர்,புதுகோட்டை,மதுரை,சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம்,தூத்துக்குடி ,ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தனர் .அதில் பலர் முத்தரையர் வளர்சிகளுக்கு பல அறிவுரை கூறினார்.

வருகை தந்த அனைவருக்கும் முத்தரையர் இணையத்தின் சார்பாக நன்றியை தெருவித்து கொள்கிறேன்

நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் வெகு விமர்சையாக சிறப்பாக நடைபெற்றது ,நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் ,கார்த்திக் அவர்களின் மென்மையான வரவேற்ப்பு உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது ,அதை தொடர்ந்து நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் ,தொடர்ந்து நாற்ப்பது ஆண்டுகாலம் முத்தரையர் சங்க பணிகளுக்காக எ தன்னை அற்பணித்த கொண்ட 'காற்று ' பத்திரிகை ஆசிரியர் கவிஞர் திரு ,சுமா அவர்கள் உரையாற்றினார் தொடர்ந்து ,ஆரய்ச்சி வித்தகர் ,திரு ,இராசசேகர தங்கமணி ,அவர்கள் நமது மன்னர்களின் சரித்திரம் குறித்து தெளிவாக விளக்கினார் இது நமது இளைஞர்களுக்கு பெரிதும் உற்ச்சாகத்தை அளித்தது என்பது இன்று காலை முதல் வந்த தொலை பேசிகள் உறுதி படுத்தியது .

மூன்றவதாக மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தை சார்ந்த திரு ,லோகநாதன் அவர்கள் தங்கள் சார்பில் செய்து வரும் சமுதாய பணிகளை ,குறிப்பாக கல்விக்கு ஆற்றிவரும் பணிகள் எடுத்துரைத்தார் இனத்தில் உள்ள புல்லுருவிகளை இனம் கண்டு ஒதுக்கி , நல்லவர்களை ஆதரிக்குமாறு வேண்டினார் ,MMM மன்ற பணிகள் சிறக்க நமது குழுமம் சார்பாக வாழ்த்துகிறோம் .அவரை தொடர்ந்து கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர் ,திரு ,திருமலை நம்பி அவர்கள் உரையாற்றினார் நமது சரித்திரதிருக்கு கட்டியம் கூறும் கல்வெட்டுக்கள் குறித்து அழகாக கூறினார் ,அதை தொடர்ந்து கூட்ட சிறப்பு விருந்தினர் ,அய்யா ஆர்.வி ,அவர்களின் மகன் திரு ,பால முருகன் அவர்கள் படிக்க இயலாத கஷ்ட படும் மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கப்படும் என்றும் அதேப்போல் நமது இனத்தில் உள்ள வசதி உள்ளவர்களும் கல்விக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் ,அய்யா அவர்கள் வம்பு வழக்கு தவிர மற்ற நற்பணிகளுக்கு எல்லா உதவியும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு ராமு அவர்கள் சட்டம் குறித்து விளக்கினார் அதே போல் நமது பிரதிநிதிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார் இதனிடயே அனைவருக்கும் ,பிஸ்கட் ,மிக்ஸ்ச்சர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன ,அதை தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது ,பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது ,அதை சிறப்பாக நமது நண்பர்கள் பயன்படுத்திகொண்டனர் அனைவரும் தங்களின் கருத்துக்கள் பதித்த பின்னர் அவர்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்ட பின்னர் நிறையுறை ஆற்றினார் சண்முகம் ,இறுதியாக திரு ,பாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்த மதிய உணவு அருந்திய பின்னர் அனைவரும் பிரியா விடை பெற்றோம் . அடுத்த சந்திப்பு கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பட்டுக்கோட்டையில் நடை பெறுகிறது , அதற்க்கான ஆயத்த பணியில் ஈடுபடுமாறு கேட்டு கொள்கிறோம் 




உண்மையில் இந்த கூட்டம் எங்களுக்கு நெகிழ்ச்சியை உண்டுபண்ணியுள்ளது ,இந்த கூட்டதிருக்கு தானே முன்வந்து நமது அருமை உறவினர் தண்ணிர் பாட்டில்களை சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்தார் அந்த நல்ல உள்ளத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் , அதேப்போல் மிக்ச்சர் வழங்கிய நமது மதுரை சகோதரர்க்கும் நன்றிகள் , எல்லாத்திற்கும் மேலாக எனக்கு முதலிலேயே சொல்லகூடாத என்று கூறி ஒரே மணி நேரத்தில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுத்த அய்யா அவர்களின் புதல்வர் திரு ,பாலமுருகன் அவர்கள் ஒவ்வரு மேசைக்கும் சென்று சொல்லிக்கொண்டு விடை பெற்றது உபசரிப்புக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ,அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .தெரிவித்து கொள்கிறோம் 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது