18 செப்., 2012

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் முத்தரையர் சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்: மாநில துணைத்தலைவர்

திருச்சி, செப். 12- 
 
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் முத்தரையர் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் மங்களா ப.செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
திருச்சி மலைக்கோட்டை மாநகர் ஸ்ரீரங்கத்தில் மக்கள் நலப்பணி திட்டங்களையும், ரெங்கநாதர் கோவில் தினசரி நாள் முழுவதும் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைக்க நாளை (13-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகை தருகிறார். முத்தரைய மக்களின் வரலாற்று மன்னர் பெரும் பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாநகரில் சிலை அமைத்து தந்து மாவட்டத்திற்கும் மன்னரின் பெயர் சூட்டி பல்வேறு பிரிவுகளாக 29 பட்டப்பெயர்களில் வாழ்ந்த முத்தரைய சமுதாயத்தை ஒரே பட்டப்பெயராக முத்தரையர் என்று அழைத்திட உத்தரவு வழங்கி நம் சமுதாயத்தை பெருமைப்படுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்த நல்ல நாளில் நன்றி மறவாமல் வரவேற்போம்.
 
முத்தரைய சமுதாய மக்கள் அமைதியாய் கண்ணியத்துடன் பெரும் திரளாக வந்து கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
 
இவ்வாறு மங்களா செல்லத்துரை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது