13 ஜூலை, 2012

முத்தரைய மன்னன்

முத்தரையர் :
பல்லவ மன்னன் தந்திவர்மனைப் பல்லவர் காலப் பட்டயங்கள் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரம் போன்றவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவன் என்கின்றன. இவன் திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்கு ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கைலாசநாதர் கோயிலைக் கட்டினான். இவன் வைணவன். ஆயினும் சைவ-வைணக் கோயில்கட்கு நிரம்பப் பொருள் தந்தான் என்பதைப் பட்டயங்கள் உறுதி செய்கின்றன. இவனது 16-ஆவது ஆட்சிஆண்டில் முத்தரைய மன்னன், திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான் என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. தந்திவர்மன் காஞ்சிப்பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றைஅளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுத் தருகிறது.

    மூன்றாம் நந்திவர்மன் சிற்றூர்களைத் தேவதானமாகத் தந்தான். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவ பெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றூர் தரப்பட்டமையைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவன் திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால், ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்று அழைத்துத் தானமாகத் தந்தான். திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான். திருச்சிக்கு அருகில் உள்ள கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன். திருவிடைமருதூரில் கோவில் திருப்பணி செய்து உள்ளான். இவனது மனைவி தஞ்சையை அடுத்த நியமம் என்ற சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர், 5 நாழியும் அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன்னும் அளித்துள்ளாள். இவனது கீழிருந்த சிற்றரசர்களும் திருப்பணி செய்யத் தயங்கிடவில்லை. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திருஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வலுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான். ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவிலில் நந்தாவிளக்குக்காகப் பொன் அளித்தான். ஒருவன் செந்தலை - சுந்தரேசுவரர் கோவிலுக்கு நிலம் அளித்தான். திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றூர்கள் தேவதானமாக விடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஓதுவார் உள்படப் பலபணி செய்வோருக்கு 2000 காடி நெல்லும் 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன. ஒருவன் திருப்பராய்த்துறையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தா விளக்குகட்கும் நெய்க்குமாக நிலம் அளித்தான். 

    மூன்றாம் நந்திவர்மனை, ‘சிவனை முழுதும் மறவாத சிந்தையன்’ என்று நந்திக்கலம்பகம் போற்றுகிறது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து, “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்றுகூறியுள்ளார். இவனது கோயில் திருப்பணிகளும் இவனை ஒரு சிறந்த சிவபக்தன் என்று உரைக்கின்றன. வேலூர் பாளையப் பட்டய வரிகள் இதை அரண் செய்கின்றன. ‘சிவனது திரு அடையாளம் நெற்றியில் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக என்று வேண்டுகின்றான்’ என்கிறது, அந்தப் பட்டயம். 

     சைவ, வைணவ, சமண, பௌத்த இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றியதில் வியப்பு இல்லை.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது