18 ஜூலை, 2012


தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மரு.பாஸ்கரன், துணைத்தலைவர் செல்லாண்டி, இளைஞரணி செயலாளர் பெரியகோபால், மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பெரியசாமி, மூர்த்தி, விஸ்வநாதன், கருணாகரன், சங்கர், பாபு, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முத்தரையர் சமுதாய பட்டியலில் உள்ளவர்களுக்கு கல்வி, ÷ வலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கிட, தமிழக அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் தெ õடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். திருச்சி காவேரி ஆற்றில் சம்மர் பீச் அமைத்தும், நø டபயிற்சி செய்பவர்களை பள்ளி, கல்லூரி மைதானங்களை பயன்படுத்திட அனுமதி பெற்றுத்தந்த அமைச்சர் சிவபதிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால், உண்மையான ஜாதிவாதி மக்கள் தொகையை தெரிந்து கொள்ள, தமிழக அரசே மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மண்ணச்சநல்லூர் எம்.ஆர்., பாளையத்தில் விலங்குகள் சரணாலயம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்திட வேண்டும்.முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை இணைக்கும் ஸ்ரீரங்கம்-நொச்சியம் கொள்ளிடம் தரைப்பாலம், கிளிக்கூடு-லால்குடி கொள்ளிடம் தரைப்பாலம் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட மண்ணச்சநல்லூர்-சிறுபத்தூர் உப்பாற்று நீர்தேக்கம் அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த அணைக்கு நீர்வரும் வரத்து வாய்க்கால்கள், வாரிகள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை சீர்படுத்தி, அணையை செப்பனிட்டு, பூங்காவை பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது