6 ஜூலை, 2012

கொங்கு முத்தரையர் வேட்டுவக்கவுண்டர் கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு


கொங்கு முத்தரைய  வேட்டுவக்கவுண்டர்

கொங்கு முத்தரைய வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு


கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமதுமுதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான்,வேட்டுவ தியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.

ஆதாரங்கள்
 
கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,வெங்கம்பூர், திருச்செங்கோடு, ஈரோடு,ஏழூர், மூக்குத்திபாளையம், பருத்திபள்ளி, வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,அவினாசி,திருமுருகன் பூண்டி,இரும்பறை,பழமங்கலம்,அந்தியூர்,சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள  கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம்,திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர்வபட்டயமும், இலக்கியங்களும்  வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.

பூர்வீகம்
 
இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார்.புராணங்களும்,பழங்கதைகளும் இவர்களைகுருகுலத்தவர் எனச் சுட்டும்.சைவ நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரின் கால்வழியினரே வேட்டுவர் எனக்கருதுவோரும் உண்டு.இருப்பினும் இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வகுடிகள்(ஆதிகுடிகள்) என்பதுறுதி.வேட்டுவர் பிரமனால் படைக்கப்பட்ட ஆதிவமிசத்தார் என்று வேளாளர் புராணம் கூறும்.வேறு சில பட்டயங்கள் வேட்டுவர் முத்தரையரின்(முத்துராஜா) கால்வழியினர் எனச்செப்புகின்றன.முத்தரையரும், வேட்டுவரும் கண்ணப்பநாயனாரைத் தமது குலதெய்வமாக
வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,வேட்டுவர்,வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.

இவர்களுள் 1.வேட்டுவன், 2.வேடன், 3.காவிலவன், 4.மாவிலவன், 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும் குகை ஓவியங்களும் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் வேட்டைக்காட்சிகள், வேட்டுவரின் வாழ்கை முறையைச் சித்திரிப்பதாகவே உள்ளன.கொங்கு நாட்டில்காணப்படும் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுகற்களும், பெருங்காலச் சின்னங்களும் வேட்டைத் தொழிலைமேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும்.

Thanks to  Konguvettuvagounder.blogspot.com

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது