3 பிப்., 2024

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம்

இந்திய அரசியல் கட்சி

தமிழக வெற்றி கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியாகும். [1][2] 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் இக்கட்சியை தொடங்கினார்.[3][4] தமிழ் மக்களின் வளர்ச்சியே இக்கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம்
Tamilaga Vettri Kazhagam
சுருக்கக்குறிTVK
தலைவர்யோசப் விஜய்
நிறுவனர்யோசப் விஜய்
குறிக்கோளுரைபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தொடக்கம்2 பிப்ரவரி 2024
தலைமையகம்சென்னை –(பனையூர்) 600019, தமிழ்நாடுஇந்தியா.
கொள்கைசமவுடைமை
இடதுசாரி அரசியல்
நிறங்கள்     கருஞ்சிவப்பு
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்படவில்லை
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
0 / 234
இணையதளம்
https://tvkvijay.com/
இந்தியா அரசியல்

வரலாறுதொகு

2009 ஆம் ஆண்டு, விஜய் தனது இரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று நற்பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தொடங்கினார்.[5][6] இந்த அமைப்பு 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்தது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வெற்றியைப் பெற்றது.[7] [8] இதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.

தேர்தல்தொகு

தமிழக வெற்றி கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், இக்கட்சி யாருக்கும் தற்போது ஆதரவு அளிக்கவில்லை என்றும் விஜய் தெரிவித்தார்.[9] மேலும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தனது கட்சியின் இலட்சியம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தன் கட்சியின் முழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.[10]

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........