15 பிப்., 2024

வேலை வாய்ப்பு பதிவுகள்

சென்ற பதிவில் இணையும் உறவுகள் பற்றி பார்த்தோம். 
இப்பதிவில்  இன்று வேலைக்கு செல்பவர்களை கணக்கிடுவதால் நமக்கு என்ன பலன் ?
இன்று வேலைக்கு செல்லாதவர்களை கணக்கிடுவதால் நமக்கு என்ன பலன்? 
வேலை கொடுப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதால் என்ன பலன்? 
வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதால் என்ன பலன்? 
வியாபாரிகள் எத்தனை பேர்?
அரசு அலுவலர்கள் எத்தனை பேர்?
அரசியல்வாதிகள் எத்தனை பேர் ?
அவர்கள் மூலம் நமக்கு ஆதாயம் உண்டா? 
காவல்துறையினர் நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கின்றனரா
நீதிமன்றங்கள் செல்லும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி யாராவது இருக்கின்றனரா? 
சரி விஷயத்துக்கு வருவோம் 
வேலைக்கு செல்பவர்கள் உள்ளூர்,வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். 
வேலை இல்லாதவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளிபடுத்தினால் அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனரா? 
இதற்காக இணையதளங்களில் வாட்சப் குரூப் ஆரம்பித்து அதன் மூலம் தினசரி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள போது இணையத்தில் தெரியபடுத்தலாம். 
5 பேர் செய்கின்ற வேலையை 4 பேர்  தான் வேலைகளை செய்வார்கள் வேலைக்கு செல்லாதவர்களை அழைத்து நம்முடன் அவர்களை வேலை செய்ய வைப்பது. 
அத்துடன் நம் சிரமங்களையும் தவிர்க்கலாம்

இதை சரி செய்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கொடுக்கலாம். 
சிரமப்பட்டு வேலை செய்பவர்க்கும் பணிச்சுமையை குறைக்கலாம். 

உதாரணமாக
கட்டிட தொழில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை 100 
வேலைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 90
செல்லாதவர்களின் எண்ணிக்கை 10
தோராயமாக 105 பேர்
செல்லாதவர்கள் எக்காரணத்திற்காக வேலைக்கு செல்லவில்லை என்பதையறிய  வேண்டும். 
வேலை இல்லாததால் செல்லவில்லை என்பதை உறுதி படுத்தியபின் அவர்களை வேலைக்கு செல்ல வைப்பது எப்படி என்பதற்காக 
ஆலோசனை கூட்டங்களை நடத்தலாம். 
இதனால் நமக்கு பயன்
 பொருளாதார சுமையை குறைக்கலாம். 
வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் அலைவது ஒரு கூட்டம். 
வேலை கிடைக்காமல் அலைவது ஒரு கூட்டம் இவர்கள் இருவரையும் இணைப்பதே நமது குழுவின் குறிக்கோள். 
வருமான கணக்கீட்டின் படி
மொத்தம் 
சமுதாய வருமானம்
100
50*900=45000
20*600=12000
30*400=12000
மொத்த வருமானம்
69000
30 நாள் கணக்கின்படி
30*69000
2070000

இதை வேலை இல்லாமல் தவற விட்டால்
எவ்வளவு இழப்பு. 
வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டும் ஆட்கள் இல்லாமல் போனல் நமக்கு எவ்வளவு இழப்பு என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இதை சரி செய்ய முதலில் அறிமுக கூட்டம் போட வேண்டும்
ஒவ்வொரும் விருப்பு வெறுப்பின்றி தங்களை அறிமுக படுத்திகொண்டு தாங்கள் பணிபுரியும் இடத்தையும்
செய்கின்ற வேலையையும் பதிவு செய்ய வேண்டும். 
சமுதாய நற்பணி மன்றங்களில் பதிவு செய்யும் போது உங்களை பற்றிய அறிவு மற்றவர்களுக்கு வளர்ச்சி அடையும். 
அதில் குழுவின் பொறுப்பாளர்கள் பெயர்களையும் தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களையும் பதிவு செய்ய வேண்டும். 
அத்துடன் மொபைல் நம்பர்களையும் பதிவு செய்து ஒரு பிரதி எடுத்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் தேவைப்பட்டால் நேரடியாக உங்களை தொடர்பு கொள்வார்கள். 
குழுவில் 100பேர் இணைந்தால் 100 பேரை பற்றியும் அனைவருக்கும் தெரிய வேண்டும். 
இதுவே முதல் கூட்டமான அறிமுக கூட்டம் என்று அழைக்கப்படும். 
இதன் பின்னர் வரும் ஆலோசனை கூட்டம் 
உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்
அதில் தங்கள் ஆலோசனைகளை கூறலாம். 
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் நாளை பார்ப்போம்
இப்படிக்கு 
பா. மணிவண்ணன் 
பொறியியல் பட்டதாரி 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........