14 பிப்., 2024

இணையும் உறவுகள் அறிமுக கூட்டம்

 நாம் சென்ற பதிவில் நமக்கு நாமே உதவும் திட்டத்தில்

1.திருமண உதவி திட்டம்

2.வீடு கட்டும் திட்டம்


பற்றிய 

ஆலோசனைகளை  பார்த்தும். 

இப்பதிவில் இணைந்த உறவுகள் அறிமுக கூட்டம்  என்ன என்பதை பார்ப்போம். 

இணைந்த உறவுகள் நாம் திருமண வழி உறவு முறைகளை இணைந்த உறவு முறைகள் என்று அழைக்கின்றோம். 

நமது 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றோம். 

அதில் உள்ளூரில் திருமணம் செய்தவர்களும் இருக்கலாம். 

வெளியூரில் திருமண செய்தவர்களும் இருக்கலாம் .

வெளியூரில் திருமணம் செய்தவர்கள் எந்த எந்த ஊரில் திருமணம் செய்தார்கள் என்ற வரிசை பட்டியலை தயார் செய்ய வேண்டும். 

அந்த ஊரில் சமுதாய நற்பணிகளில் ஈடுபாடு செலுத்திகிறார்களாக என்று அறிய வேண்டும்

வழி நடத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும் 

செல்வாக்கை பெற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்பதை அறிய வேண்டும். 

சமுதாய நற்பணிகளை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்களே என்பதை அறிய வேண்டும். 

அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும். 

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியுமா என்பதை அறிய வேண்டும்

ஒருங்கிணைத்தால் இவர்கள் அனைவருக்கும் தலைமை யேற்று நடத்த கூடிய நம்மில் ஒருவர் இருக்கும்பட்சத்தில் நாம் வரலாற்றை வென்று நிம்மப்போம் என்பதில் ஐயமில்லை. 

ஒரு வேளை இணைந்து கூட்டம் போட்டு பேசமுடியாத என்பதற்காக ஆன்மிகத்தை கையிலெடுப்போம். 

உதாரணமாக பழனி மலை முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லலாம். 

பாதயாத்திரையாக செல்லும்பட்சத்தில் ஒரிரு இடம் அல்லது இரண்டு இடம் அல்லது மூன்று இடத்தில் தங்கி ஓய்வு  எடுப்போம். 

அந்த இடங்களில் தங்கள் கருத்துகளையும் ஆலோசனை களையும் பரிமாறி கொள்ளலாம். 

வருடம் ஒரு முறை புதியதாய் ஏதேனும் கொள்கைகளை உருவாக்கி அதை நடை முறை படுத்துவதே நமது இலட்சியம். 

ஒரு ஊர் காரர்கள் மட்டும் சென்றால் அணி வகுப்பு எளிது. 

பல ஊர்காரர்கள் ஒன்று சேர்ந்து அணி வகுப்பு எப்படி. 

உதாரணமாக 

நம்முடன் இணையும் ஊர்கள் 

1.பாளையம்

2.குஜிலியம்பாறை

3.கோவிலூர்

என்று கருத்தில் போது 

பாதயாத்திரையை முதல் அணியாக பாளையம் துவங்கி வைக்கும்

அந்த அணி பாதயாத்திரையாக குஜிலியம்பாறை யை  எந்த நாள் எப்பொழுது அதை பார்த்து குஜிலியம்பாறை காரர்கள் நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்யலாம்.

ஒவ்வொரு ஊரும்  இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நிரலை முடிவு செய்யலாம். 

பாதயாத்திரை விருப்பம் இல்லாத சமுதாய நண்பர்களுக்காக நமது ஆலோசனை கூட்டத்தை பழனியில் ஓய்வு எடுக்கும் நேரங்களை இதற்கு பயன்படுத்தலாம். 

நமக்கான நேர விரயங்களை மிச்ச படுத்தலாம். 

தேவைப்பட்டால் வரவு செலவுக் கணக்கு களை சரிபார்த்து சமுதாய அன்பர்களிடம் ஒப்படைக்கலாம். 

புதியதாய் இணைந்தவர்களை நாம் கூட்டத்தில் அறிமுக படுத்தலாம். இதே போல் வருடத்திற்கு ஒரு முறை கூட்டம் போடும்போது குடிகாரர்கள் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கலாம். 

கூட்டங்கள் எப்பொழுது முடியும் என்ற மனநிலை நமது நண்பர்களுக்கு வரவே வராது. 

கண்டிப்பாக இது போன்ற ஆலோசனைகளுக்கு நமது வலைப்பதிவை தொடருங்கள்



கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........