11 பிப்., 2024

சமுதாய நற்பணிகள் ஆலோசனை-2

1.திருமணத்திற்கு உதவும் திட்டம்

2.வீடு கட்டுவதற்கு உதவும் திட்டம்

சமுதாய நற்பணி மன்றங்கள் ஆரம்பித்து முன்னேற துடிக்கும் வாசகர்களுக்கு
இணையத்தின் மூலம் நமக்கு தெரிந்த கருத்துகளை பதிவிடுகிறோம். 


நம்முடைய முதல் இலக்கு 

திருமண தம்பதிகளுக்கு உதவுவதே

உதாரணமாக நமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை வருடத்திற்கு 10 ஜோடிகளுக்கு திருமணம் ஆனது எனில் 

1.நம்முடைய இலக்கு திருமணத்திற்காக ஒதுக்கப்பட்ட வேண்டிய நிதியை முடிவு செய்யபட வேண்டும். 

2.இலக்கு 10 லட்சம் எனில் அதற்கு நிதியை திரட்ட எடுத்துரைக்க வேண்டும். 

3.மாத சந்தாக்களை எவ்வளவு என்பதை நிர்ணயிக்கபட வேண்டும். 

4.சந்தாதாரர்களின் எண்ணிக்கை 250 என்று இருப்பின் மாத சந்தாக்கள் 400 ரூபாய் என்று நிர்ணயம் செய்யலாம். 

5.400 என்பது எளிமையான இலக்கு என்பதால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் என்பது நமக்கு வருமானம் வரும். 

6.அடுத்த மாத கூட்டத்தில் தம்பதிகளை அழைத்து அவர்களுக்கு உண்டான அன்பளிப்பு தொகையை அவர்களிடம் கொடுக்கலாம். 

7.ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும் தருவாயில் தம்பதியர்களுக்கு பிரித்து கொடுக்கலாம். 

8.மாதத்திற்கு ஒரு திருமணம் என்பது சிறப்பு. 

9.மாத கூட்டங்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். 

10.திருமணத்திற்கு கொடுக்கப்படும் நிதிக்கான விதிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும். 

11.சமுதாய நற்பணி இயக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பிதழை கொடுக்க வேண்டும். 

12.திருமணம் ஆகும் தம்பதிகள் திருமணத்தில் எடுக்கும் மணமகன், மணமகள் போட்டோவை சமுதாய நற்பணி இயக்க தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். 

13.கிராம நிர்வாக அலுவலர் திருமணமானதற்கு உண்டான சான்றுகளை சமுதாய நற்பணி இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

14.திருமணமானவர்களில் இருவரில் ஒருவர் சமுதாய உறுப்பினராக குறைந்த பட்சம் ஒரு வருடாமவது இருந்திருக்க வேண்டும். 

15.சமுதாய நற்பணிகளின் விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........