12 பிப்., 2024

சமுதாய நற்பணிகள் ஆலோசனை-2

 சென்ற பதிவின் தொடர்ச்சி

சென்ற நமது இன குழுக்களில் திருமண உதவியை குழுக்களில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுவது எப்படி என்ற ஆலோசனைகளை கூறி வருகிறோம்.

இந்த பதிவில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள போவது 

வீடு கட்டுவதற்கான திட்டம் 

மாதம் ஒருவரை தேர்ந்தெடுப்போம் வீடில்லா நிலையை ஒதுக்கி வைப்போம். 

வீடு கட்டி தருவதற்கு மத்திய அரசும் மாநில அரசும் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை மூலமாக நடைபெற்று வருகிறது. 

அதே வேலையை நமது இனக்குழுக்கள் மூலமாகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நம்மாலும் இயன்ற அளவு உதவியை நாம் செய்யலாம். 

இதற்கு முன்  களப்பணியில் ஈடுபட வேண்டும். 

1.நாம் ஒவ்வொருவரின் பொருளாதார வளர்ச்சி எந்நிலையில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

2.வீடு கட்டும் திட்டம் பொதுவான திட்டமாக அறிவித்த பின் மாதம் ஒருவருக்கு வீடு கட்டுவதற்கு உதவலாம். 

3.முழு பணமும் நம்மால் தர இயலாத காரணத்தால் நாம் பொருளாதார வளர்ச்சி கேற்ப ஒரு லட்சம் ரூபாய் பணம் வீடு கட்டுபவர்களுக்கு கொடுக்கலாம். 

4.அதற்கு கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் விதிக்கலாம். 

5.சொந்த பட்டா நிலமாக இருக்க வேண்டும். 

6.வீடு கட்டுபவர்கள் குழுவில் குறைந்த பட்சமாக மூன்று ஆண்டுகளாவது உறுப்பினராக இருக்க வேண்டும். 

7.வீடு கட்டுபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே குழுவின் தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

8.வீடு கட்டிய பின் புதுமனை புகுவிழா அன்று அப்பணத்தை வீடு கட்டியவரிடம் ஒப்படைக்கப்படும். 

9.அனைவருக்கும் உதவும் திட்டம் பொறாமைகள் இல்லாமல் நம்மில் ஒருவர் பலன் அடைய வேண்டும். 

10.வீடு கட்டும் பணிக்கு குழுவில் உள்ளவர்கள் மட்டுமே பணியமர்த்த பட வேண்டும். 

11.குழுவில் ஆட்கள் இல்லாத பட்சத்தில் வெளி ஆட்களை தேர்வு செய்யலாம். 

12.இதற்கான மாத சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை பொறுத்து மாறுபடும். 

13.பயனாளிகள் ஒரு முறை பலன் அடைந்து விட்டால் மறுபடியும் பலன் அடைய அனைத்து உறுப்பினர்களும் பலன் அடைந்த பின் தான் சாத்தியம். 

14.மாதம் ஒருவருக்கு வீடு கட்டும் திட்டம்

15.பயனாளிகள் பலன் அடைந்த பின் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு மட்டும் வீட்டு வரி அறிமுக படுத்தபடும். 

16.வீட்டு வரியின் மதிப்பு 1000 என நிர்ணயிக்கலாம். 

குறிப்பு:

1.வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செயல்படும். 

2.ஆன்மிக பணிகளுக்காகவோ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காகவோ இனக்குழுக்கள் செயல்படாது. 

3.பொருளாதாரத்தில் மேம்பட்டவனாக மாற்ற வேண்டும் என்பது தான் இலக்கு. 

4.இது ஒரு இலவச திட்டம். இது ஒரு கடன் திட்டம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


5.200 நபர்கள் இருக்கும் பட்சத்தில் மாதம் 500,மாத சந்தாவாக வசூல் செய்ய வேண்டும்.


கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........