22 அக்., 2012

முத்தரைய நாட்டு அம்பலம்:


இன்றைய நிலையில் அம்பலகாரர் எனும் பட்டத்தை பயன்படுத்தும் சமுதாயங்கள் மூன்று. அவை முத்தரையர், முக்குலத்தோர், யாதவர். இன்னும் சிலர் குறைவான அளவிலும் வல்லம்பர் போன்றோரும் பயன்படுத்துகின்றனர்.

உண்மையில் இது யாருக்குரிய பட்டம்? யார் முதலில் பயன்படுத்தியது? இவர்களில் யாருக்கு இது பொருத்தமான பட்டம்? தெரியவேண்டுமல்லவா!

ஆம்! அன்றும் இன்றும் என்றுமே, அம்பலகாரர் என்றாலே முத்தரையர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை என்பது நாம் அறிந்ததே. பிறகு ஏன் இதை மற்றவர்களும் தமதாக்கிக் கொள்ள நினைக்க வேண்டும். விஷயம் இதுதான்!

ஏனெனில், அம்பலகாரர் எனும் பட்டம் எக்குலத்தோரையும் நேசிக்கத் தூண்டும், உன்னதமான, உயர்வான, ஈடு இணையில்லாத, முத்தரையர் குலத்தின் ஆற்றல் மிகு அடையாளம். ஒரு குறிப்பிட்ட மக்களை தம் கட்டுக்குள் வைதிருப்பவர்களையே அம்பலம் என்பர். 'காரர்' என்பது மரியாதைக்காக சேர்க்கப்பட்டு அம்பலகாரர் என்றானது. அம்பலம் எனும் சொல் நாட்டாண்மை என்பதற்கு முன்பிருந்து, ஆதிகாலத்திலிருந்தே வழங்கப்பட்டு வந்த ஒரு சொல். அப்படி அடக்கி ஆண்டவர்கள் பிற மக்களுக்குள் நிகழ்ந்த சச்சரவுகளையும் தீர்த்து வைத்தார்கள். அக்காலத்தில் எந்த ஒரு இனத்திலும், பிரச்சனை என்றாலே அவர்கள் முத்தரையர்களிடம் தான் வழக்கை தீர்த்து விடும்படி நீதி கேட்டு வருவர். இவ்வாறு பிறரை அடக்கி ஆளத் தகுதியும், யாவர்க்கும் நீதி சொல்லத் துணிவும் திறமையும் வாய்க்கப்பெற்ற காரணத்தால் தான் முத்தரையர்க்கு அம்பலம் எனும் பட்டம் வந்தது. முதன் முதலில் இப்பட்டம் பெற்றவர்களும் இவர்களே. இவ்வாறு அம்பலஞ் செய்ய முழுத்தகுதி படைத்தவர்களும் முத்தரையர்களே என்பது தெளிவு.

60 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல ஊர்களில் அம்பலத்தின் முன்னால் மற்றவர்கள் கை கட்டி வாய் பொத்தி நின்றுதான் பேசவேண்டும் போன்ற வழக்கங்கள் இருந்தது. பலர் அம்பலகாரரிடம் அடிமைகளாகவும் இருந்ததுண்டு. கள்ளர்களையும் இன்னபிற உயர்சாதியினர் என சொல்லிக்கொண்டு திரிபவர்களையும், இதே அம்பலகாரர்கள் தங்கள் ஊர் கோவிலுக்கு பந்தம் பிடிக்கவும் தங்களுக்கு தொண்டூழியம் செய்யவும் அயலூரிலிருந்து கொண்டுவந்து தங்கள் ஊரில் குடியமர்த்திய செய்திகள் பல உண்டு. இச்செல்வாக்கின் காரணமாகத்தான் தமிழ் திரையுலகில் அம்பலகாரர்களைப் பற்றி பல்வேறு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்பலகாரர்(ஊரின் அம்பலம்) அவ்வூரின் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் இருந்தனர், அவ்வாறு மதிக்கப்பட்டனர். பட்டங்களைப் பாதுகாக்க வேண்டியது பரம்பரைக் கடமை.

கள்ளர், கோனார் போன்றோரில் தலைவனுக்கு மட்டும்தான் அம்பலகாரர் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் முத்தரையர்களிலோ தலைவன், தலைவி, அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என வாரிசுகள் அத்தனை பேருக்கும் அம்பலகாரர் என்றுதான் பெயர். முத்தரையர் சமூகத்தில் மட்டுமே அம்பலகாரர்கள் அதிகம் உள்ளதற்கு இது ஒரு காரணம். கள்ளரில் அம்பலகாரர் என்றால் அவன் கள்ளனுக்கு மட்டும் தான் அம்பலகாரனாக இருப்பான். ஆனால் முத்தரையரில் அம்பலகாரர் என்றால் அவன் கள்ளன், பள்ளன், மறவன், கவுண்டன், வன்னியன் என அத்தனை பேருக்கும் அம்பலகாரனாக இருப்பான், அடக்கியும் ஆள்வான். பின்நாளில், தங்கள் இனத்தைப் போலியாக உயர்த்திக் கொள்ளும் பொருட்டு கள்ளர் போன்றோரின் வாரிசுகளும் தங்களை அம்பலகாரர் என்றே கூறிக்கொண்டனர். இது அவர்களுக்கு கை வந்த கலை. அம்பலம் எனும் பதவி மீது கொண்ட ஆசையால் முத்தரையர்களைப் பார்த்து பயன்படுத்த தொடங்கியவர்களே மற்றவர்கள்.

முத்தரையர்களே,

சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்கள் பெயரை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறும் பொருள்படும் வகையில் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதல் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த ஆயுளே முத்தரையர் தம் அணுபவத்திற்கு ஈடாகாது. பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட நாம், அணு அளவும் குறைந்தவர் அல்ல என்பதை உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம். இங்குள்ள இனங்களுள் மேன்மை பொருந்திய குலம் முத்தரையர் குலமே என்பதை நாடறியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!

முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை, அவர் காணாத களமும் இல்லை, நுகராத துறை இல்லை, பெறாத பட்டமும் இல்லை, அவரை பாடாத புலவரும் இல்லை, எட்டாத புகழ் இல்லை, முத்தரையர் போல் மக்கள் வளம்(population) யார்க்கும் இல்லை, இவர்கள் ஓன்று சேரப் போவதுமில்லை, சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை, தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை, முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை, எல்லோரிடமும் பற்றும் இல்லை, நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை, அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை, முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை, அரசியலில் செல்வாக்கில்லை, பொருளாதார பலமில்லை, சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை...

இருப்பினும் எம்மினமும் இவ்வுலகில் சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இவைகள் எல்லாம் இல்லாத போது, வெறும் நீண்ட வரலாற்றையும் மிகுந்த மக்கள் தொகையையும் மட்டுமே வைத்துக்கொண்டு “முத்தரையர்” எனும் பெயர் அனைவருக்கும் தெரிவதில்லை என்றால் எப்படித் தெரியும்? சாத்தியமில்லை! என்று மாறும் இந்த நிலை? இல்லை, மாறுவதற்கு ஏதேனும் அறிகுறி தான் உண்டா? சங்கங்கள் மட்டும் சந்துக்குச் சந்து முளைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, சாதனை என்பது பெரிதாக இல்லை!

வந்தாரை வாழ வைக்கும் முத்தரையர் சமுதாயமே, நீ இவ்வுலகறிய வாழப்போவது என்று!!!...

மாற்றம் நோக்கி மன்னர் குலம் - முத்தரையர் விமல்...
பிடிக்கவில்லை ·  ·  · 24 நிமிடங்களுக்கு முன்பு
  • நீங்கள் இதனை விரும்புகிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது