30 ஜன., 2013

சருகுவலையபட்டி ஊராட்சி(625109)....


மேலூர் வட்டாரத்தில் பிரபலமான ஊர்.இந்த ஊரை பற்றி தெரியாதவர்கள் மேலூர் வட்டாரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.மேலூர் வட்டாரத்தின் முத்தரையர் கோட்டை சருகுவலையபட்டி...இங்கு வாழும் அனைவருமே முத்தரையர்கள் தான். “வீரத்திலும்,இனபற்றிலும்” பேர் வாங்கிய ஊர்.... விவசாயம் முக்கிய தொழில். வெளிநாட்டிலும் வெளி ஊர்களும் பலர் வேலைசெய்கின்றனர் ..... 10 வருடங்களில் பொருளாதரத்தில் அதிக வளர்ச்சி பெற்ற முத்தரையர்களின் பெரிய கிராமம்.....மதுரையை மீனாட்சி அம்மன் ஆள்வது போல் எங்கள் ஊரை ஸ்ரீவீரகாளி அம்மன் ஆள்கிறார்... இங்குள்ள கோவில்கள் ... வீரகாளி அம்மன் கோவில் ,ஊதகருப்பு கோவில்,அய்யனார் கோவில், சூழபிடாரி அம்மன் கோவில்,முருகன் கோவில்,விநாயகர் கோவில் உள்ளன ... மூன்று முத்தரையர் படம் வரைந்த வளைவுகள் உள்ளன .... இந்த ஊரில் 1800கலில்லிருந்தே முத்தரையர்கள் வாழ்த்திருகின்றனர். 1912ல் எங்கள் அய்யா நிலம் வாங்கிய பத்திரம் உள்ளது... அப்போது சருகுவலையபட்டி தெற்குவலயபட்டி என்றே இருந்தது.அப்போது கள்ளர்கள் வாழும் கீழவளவு பஞ்சயதுக்கு உட்பட்டு இருந்தது..பிறகு நம் மகளிடம் ஏற்பட்ட எழுச்சி முத்தரையர்கள் உள்ள பகுதியை பிரித்து சருகுவலயபட்டி என்ற பெரும் பஞ்சயதாக உருவாக்கினர்.சருகுவலயபட்டி பஞ்சயதுக்கு கட்டுபட்டு சில ஊர்கள்உள்ளன. s.வடக்குவலையபட்டி, s.ஒத்தப்பட்டி, s.மனபட்டி, s.அறியுர்பட்டி s.மொட்டலாம்பட்டி, s.லெட்சுமிபுரம்........இங்கு உள்ளவர்கள் சருகுவலயபட்டியை பெரிய ஊர் என்று அழைப்பர் ..இந்த ஊராட்சியில் சென்ற தேர்தல் நிலவரப்படி 5500.பேர் ஓட்டுபோட தகுதிஆனவர்கள்...ஒரு பிரசிடென்ட் மற்றும் மூன்று நட்டமைகள் இந்த ஊரை ஆள்கின்றனர்... முதல் நாட்டமை (ஆண்டிநாட்டமை),இரண்டாவது (அடைக்கண் நாட்டமை),மூன்றாவது நட்டமையை( நோட்டம்) என்றும் அழைப்பர்... .கிராமத்து மந்தையில் தான் வழக்குகள் தீர்க்க படும் .அந்த மந்தைக்கு முன் ,மந்தை பொட்டலில், யாரும் செருப்பணிந்து நடக்க கூடாது.செருப்பை கையில் எடுத்துகொண்டு தான் செல்ல வேண்டும். 1900ம்களில் அவ்வாறு செருப்பு போட்டு நடப்பவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் பழக்கமும் இங்கு இருந்துள்ளது.கோவிலின் முன்னாலும் கோவிலை கடக்கும் வரையில் செருப்பு போட மாட்டர்கள். நானும் அதை கடைபிடித்துள்ளேன் வெளிஊர்களில் இளைகர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளையும் நட்டமைகள் தான் தீர்கின்றனர்.....ஊரில் கட்டுபாடுகள்,உத்தரவுகள் நட்டமைகளால் பிறப்பிக்க படுகிறது..நட்டமையை தேர்ந்தெடுப்பதிலும் கட்டுபாடுகள் பின்பட்றபடுகின்றன..தமிழ் வருட முதல் நாள் அனைவரும்கூடி ஏறு வைத்து சாமி கும்பிடுகின்றனர்.பின்பு அவரவர் வயல்களில் ஏறு வைத்து சாமி கும்பிடுவார்..பின்பு மூன்று நாட்டமை கரைக்கு பத்தியப்பட்ட பங்களிளிகள் நாட்டமை பதவி வேண்டி வெத்தலை வைக்கின்றனர்..அதன் அடிப்படையில் நாட்டமை பொறுப்பு வழங்கபடுகிறது..நாடமையின் முன்னிலையில் திருமணம் நடக்கிறது...பெரும்பாலும் எங்கள் ஊரில் திருவிழாக்கள் அதிகம்..நல்லி கோவில் குதிரை எடுப்பு மற்றும் மஞ்சுவிரட்டு,..வீரகாளி அம்மன் பூதட்டு திருவிழா மற்றும் தேர் வலம்...,ஊததக்கருப்பு சாமி கோவில் விரதம் மற்றும் கிடாவெட்டு...,பொங்கல் மஞ்சுவிரட்டு..கிராமத்து மஞ்சுவிரட்டு....அனைத்தும் சீரும் சிறப்புடன் அம்பலகரர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது...எங்கள் ஊரின் வீரவிளையாட்டு கபடி....அன்னா பிறந்த நாள் அன்று கபாடி போட்டிகள் நடத்த படுகிறது.....அதிரடி அண்ணா கபாடி குழு இங்கு புகழ் மிக்கது....
நன்றி...
பெரும்பிடுகுமுத்தரையர் புகழ் வாழ்க ...

reference:www.facebook.com/bharathambalam

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........