26 ஜன., 2012

ராமேசுவரத்தில் பெரும் பிடுகு முத்தரையர் படம் அவமதிப்பு: மறியலில் ஈடுபட முயற்சி Ramanathapuram ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12, 3:40 PM IST


ராமேசுவரம், ஜூன். 12-
 
ராமேசுவரம் அடுத்த கரையூரில் முத்தரையர் சங்கம் சார்பில் பெரும் பிடுகு முத்தரையர் படம் வரைந்த போர்டு வைக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு “மர்ம” ஆசாமிகள் யாரோ பெரும் பிடுகு முத்தரையர் படத்தை அவமதித்திருந்தனர்.
 
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமா னோர் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து கிராம தலைவர் மலைராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலை மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
 
இந்நிலையில் இன்று காலை முத்தரையர் படத்தை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது