மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

8 ஜூலை, 2013

பணியிடங்கள்


 

இந்திய உணவுக் கழகத்தில் 460 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ்., பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) பல்வேறு நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. ஜெனரல், டெப்போ, அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் மூவ்மென்ட் ஆகிய பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தெற்கு மண்டலத்தில் 197 பணியிடங்கள் உள்பட மொத்தம் 460 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி
பணியிடங்கள் : 460
மண்டலம் வாரியாக பணியிடங்கள் விவரம் : வடக்கு மண்டலம் 158 பேர், தெற்கு மண்டலம் – 197 பேர், கிழக்கு மண்டலம் – 12 பேர், மேற்கு மண்டலம் – 47 பேர், வடகிழக்கு மண்டலம் – 46 பேர்
வயது வரம்பு
1–8–13 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். மற்றும் பி.இ., பி.டெக் படிப்புகளை முடித்தவர்களுக்கும், சில படிப்புகளில் முதுகலைப்பட்டம் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் விரும்பும் பணிக்கான சரியான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பவர் கள், உணவுக் கழகத்தின் இணைய தளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, கட்டணம் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆப்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி றிஙி ழிஷீ. 35, ஷிமீநீtஷீக்ஷீ19, ழிஷீவீபீணீ201301 என்ற  முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதி
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் :  31–7–13
மேலும் விவரங்களை அறிய   http://fcijobsportal.com  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண் – பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: –
ராணுவத்தில் பல்வேறு நுழைவுத் திட்டங்களின் கீழ் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சியுடன் கூடிய பணி வழங்கப்படுகிறது. தற்போது ‘என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி’ நுழைவுத் திட்டத்தின் படி என்.சி.சி. வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணமாகாத ஆண்– பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் (35–வது கோர்ஸ் கமென்சிங் ஏப்ரல்–2014)
பணியிடங்களின் எண்ணிக்கை : 54 (ஆண்கள் – 50 பேர், பெண்கள்– 4 பேர்)
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 19 வயதுக்கு குறையாதவராகவும், 25 வயதை தாண்டாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2–1–1989 மற்றும் 1–1–1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
என்.சி.சி. ‘சி’ சான்றிதழுடன் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் என்.சி.சி. ஹோல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் என்.சி.சி. சேவையில் குறைந்தது 2 கல்வியாண்டுகள் சேவை செய்திருக்க வேண்டும். மேலும் ‘சி’ சான்றிதழில் குறைந்தபட்சம் ‘பி’ கிரேடு பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன், என்.சி.சி. ‘சி’ சான்றிதழ் பெற்றவர்கள், ஆர்மி பெர்சனல் பணிக்கு டெல்லி அதிகாரி அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
ஷாட் சர்வீஸ் கமிஷன் மூலம் ஸ்டேஜ்1, ஸ்டேஜ்–2 தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக மருத்துவ தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து, நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:–
OC, NCC West Block IV, R.K. Puram, New Delhi 110066.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 1–8–2013
மேலும் விரிவான விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in">http://www.joinindianarmy.nic.in என்ற முகவரியைப் பார்க்கவும்.

கருத்துரையிடுக