7 மார்., 2013

முத்தரையரின் உண்மையான சின்னம் எது ? சிங்கமா ? மீனா ?


நான் படித்தது, முத்தரையரின் வரலாறை ஒரு முஸ்லிம் எழுதிஉள்ளார்

இதில் குறிப்பிட்டு உள்ளது உண்மைதானா தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே


சேரர் – முத்தரையர் தொடர்பு

அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன.

சோழர் - முத்தரையர் தொடர்பு

கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர். திருச்சி பகுதிகளில் இன்றும் சில முத்தரைய குடும்பங்கள் சோழன் என்ற பட்டப்பெயருடன் விளங்குகிறது. மேலும் பெண்களுக்கு நாச்சியார் எனவும் பெயர் வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. மக்கள், சோழமன்னர்களின் பட்டத்தரசிகளை, ‘நாச்சியார்’ என மரியாதை நிமித்தமாக அழைத்துவந்துள்ளனர். சோழர்களுடன் நெருங்கிய தொடர்பு அல்லது அவர்களின் வழிவந்தவர்கள் முத்தரையர் என்பதும் இதன் மூலம் புலனாகிறது.

பாண்டியர் - முத்தரையர் தொடர்பு

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும் வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன், மீனவன், மாறன், கடலன், வழுதி, பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டனர் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

மல்லன் - சேர, சோழ, பாண்டியர் - முத்தரையர் தொடர்பு

கங்கர் - முத்தரையர் தொடர்பு (முத்தரசர்)

களப்பிரர் - முத்தரையர் தொடர்பு

என அடுக்கிக்கொண்டே போகலாம்...

பாண்டியருக்கும் முத்தரையர்க்கும் உள்ள தொடர்பை மட்டும் தற்போது காண்போம்...

சேரர், சோழர் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே. இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. பாண்டிய மன்னர்களால் முச்சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

முத்தரையர் என்போர் முதலில் பாண்டிய நாட்டை ஆண்ட அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏககாலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும் ஆண்டிருக்கிறார்கள். அரையர் எனும் பெயர் தோன்றியதும் பாண்டிய நாட்டில் தான். விழுப்பேரதி எனும் பெயரில் விழு என்றால் முத்து எனப் பொருள். முத்தரையர் சுவரன் மாறனின் தாயார் பூமாதேவியும் பாண்டியனின் மகளே ஆவார்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர். அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் (பரதவரின்) கிளைக்குடியினராக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.

தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான, விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு(பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிறைந்த அளவு கல்வெட்டுகளும், கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.

முத்தரையர் என்பது முத்து+அரையர், முத்து அரசர் அதாவது முத்து சல்லாபத்தில் ஈடுபடுபவர் என்று பொருள் கொள்ளலாம். முத்து சல்லாபம் என்பது சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர் பாண்டியநாட்டு வணிகர்கள். இவர்கள் மத்தியகிழக்கு மற்றும் உரோமாபுரி முதலிய மேல்நாடுகளுடன் வியாபாரம் செய்துவந்ததாக சங்க இலக்கியங்கள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மேல்நாட்டார் பயணக்குறிப்புகள் விளக்குகின்றன. முத்தரையர்கள், முது வணிகத்தில் தனிப்புகழ் பெற்று விளங்கியமையால் சாத்தன் என்று அழைக்கப்பெற்று இருக்ககூடம். எனவே, முத்து வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றினரா? என்ற கேள்வி எழுகிறது. பாண்டியருக்கும், முத்தரையருக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் பாண்டியநாட்டு வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வழுப்படுத்துவதாக உள்ளது.

(1) முத்தரையர் ஆரம்பத்தில் சமண சமய சார்புடையவராக இருந்தனர். பாண்டிய மன்னர்களும் சமய சமயச் சார்புடையவராக இருந்திருக்கின்றனர். சோழ இளவரசியை மணந்த கூன்பாண்டியன் ஆரம்பத்தில் சமண சமயச் சார்புடையவராய் இருந்தான். முத்தரையர் காலத்தில் தோன்றிய நாலடியார் என்ற நூல் சமண சமயச் சார்புடையது ஆகும்.

(2) முத்தரையரின் சின்னம் மீன் ஆகும். பாண்டியரின் சின்னமும் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.

(3) முத்தரையர் மன்னர் மாறன் என்ற பட்டம் தரித்திருந்தனர். வேல்மாறன், வாள்மாறன், சுவரன்மாறன், மாறன் பரமேஸ்வரன், செருமாறன். மாறன் என்பது பாண்டியர்களின் பட்டம் என்பது நமக்குத் தெரியும். அதாவது, மாறவர்மன், மாறன் குலசேகர பாண்டியன், மாறன் சடையன்....

(4) முத்தரையர் மல்லன் என்ற பெயர் தரித்திருந்தனர். மல்லன் அநந்தன், மல்லன் வதுமன், சத்ரு மல்லன் என வழங்கினர். மல்லன் என்பது சேர, சோழ, பாண்டியரின் குடிப்பெயராகும்.

(5) முத்தரையர் தென்னவர் எனவும், தமிழ்திரையன் எனவும் மீனவன் எனவும் வழங்கியுள்ளனர். இப்பட்டங்கள் பாண்டியருக்கு உரியதாகும்.

முத்தரையர் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடு உள்ளதாக புதுக்கோட்டை வரலாறு கண்ட திரு ஜெ.இராஜாமுகமது கூறுகிறார்.

(அ) முத்தரையர் களப்பிரர் கிளைக்குடி என எஸ்.கே.அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் களப்பிரரிலிருந்து முத்தரையர் எப்படி வந்தது என்று விளக்கவில்லை.

(ஆ) முத்தரையர் என்போர் பல்லவர் என வெங்கடசாமி நாட்டாரும், கள்ளர் என இராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் என்பது முத்து+அரையர், அரையர் என்பது நாடாள்வோர் என்பதையும் குறிக்கும். 'அரையனாய மருளகமாளவதற்கு' (தேவாரம்- 648.4)

*முத்தரையர் மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் குடிப்பெயரைப் பெற்றிருந்த செய்தியைப் புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

*செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச்சின்னம் கயல்(மீன்) எனக் காணப்படுகிறது.

இதனை ஆய்வு செய்யும்போது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
(திரு.இராஜா முகமது, புதுக்கோட்டை வரலாறு, பக்கம் 18)

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........